சோப்பு நுரையை வைத்து பனிப்பொழிவு.. சுற்றுலா பயணிகளை ஏமாற்றிய சம்பவம் - எங்கு தெரியுமா?
சோப்பு நுரையை வைத்து பனிப்பொழிவு இருப்பதுபோல் சுற்றுலா பயணிகளை ஏமாற்றிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
சீனா
சீனாவின் தென்மேற்கு சிச்சுவான் மாகாணத்தில் உள்ள செங்டு ஸ்னோ வில்லேஜ் என்ற பனி கிராமம் கடந்த பிப்ரவரி 8 அன்று திறக்கப்பட்டது. ஜனவரி மாத இறுதியில் திறக்கப்பட்டதிலிருந்து இங்கு நிலவும் பனிப்பொழிவைப் பார்க்க ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அங்கு வருகை வந்தனர்.
ஆனால், அந்த இடத்தில் பருத்தி மற்றும் சோப்பு நுரையைக் கொண்டு பனிப்பொழிவு இருப்பது போல் அமைக்கப்பட்டு இருப்பதைச் சுற்றுலாப் பயணிகள் சுற்றுலாப் பயணிகள் கண்டுபிடித்தனர். இது குறித்து புகார் அளித்தனர்.
பனிப்பொழிவு
செங்டு ஸ்னோ வில்லேஜ் குடிசைகள் மற்றும் வனப் பாதைகளை உள்ளடக்கிய பகுதியாக உள்ளது. ஆனால் தாங்கள் எதிர்பார்த்த அளவுக்குப் பனிப்பொழிவு இல்லை.
இதனால் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறையும் அச்சத்தில் இப்படிச் செய்ததாக நிர்வாகம் ஒப்புக்கொண்டு மன்னிப்பு கோரியுள்ளது. இதனையடுத்து அந்த சுற்றுலாத் தலம் தற்காலிகமாக மூடப்பட்டது. தற்பொழுது இந்த சம்பவம் சீனாவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.