நிமிடத்திற்கு ஒருவர் பலி; சீனாவை உலுக்கும் கொரோனா - உலகநாடுகள் கலக்கம்!
ஒரு வாரத்தில் மட்டும் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா பாதிப்பு
சீனாவில் நிலைமை ரொம்பவே மோசமாக உள்ளது. அங்கு கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருக்கிறது. தற்போது அங்கு கொரோனாவிற்கான கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளன. இதனால் வைரஸ் பாதிப்பு மின்னல் வேகத்தில் பரவி வருகிறது.

இதுகுறித்து அந்நாட்டின் சுகாதார அதிகாரி, கடந்த ஜனவரி 13 மற்றும் 19 வரையிலான காலகட்டத்தில் மட்டும் சீனாவில் 13,000க்கும் அதிகமாக கொரோனா தொடர்பான மரணங்கள் பதிவாகியுள்ளது. முன்னதாக கடந்த ஜன.12ஆம் தேதி வரை மட்டும் மருத்துவமனைகளில் சுமார் 60 ஆயிரம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
பலி அதிகரிப்பு
தொடர்ந்து வெளியிட்ட தகவல்படி, கடந்த ஜன. 13 முதல் ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 13 ஆயிரம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதாவது நிமிடத்திற்கு 1.2 கொரோனா உயிரிழப்புகள் இந்த காலகட்டத்தில் பதிவாகியுள்ளது.
பொதுமக்களில் 80% பேருக்கு ஏற்கனவே கொரோனா பாதிப்பு ஏற்பட்டுவிட்டதாகவும் இதனால் நாட்டில் மீண்டும் ஒரு கொரோனா அலை ஏற்பட வாய்ப்பில்லை என்றும் அந்நாட்டின் தலைமை தொற்றுநோயியல் நிபுணர் வு ஜுன்யூ கூறினார் தெரிவித்துள்ளார்.