தலைவிரித்தாடும் கொரோனா: தற்கொலை செய்து கொள்ளும் மக்கள் - சோகத்தில் சீனா
கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவின் வூஹான் மாநிலத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் அதற்கு அடுத்ததாக உலகம் முழுவதும் பரவியது.
கொரோனா
தொடர்ந்து சீனாவில் றிப்பிடத்தக்க வகையில் புதிய பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் அதிகரித்து இருக்கிறது. கொரோனாவின் மாறுபட்ட வேரியன்டான ஓமைக்ரான் பிஎஃப் 7 காரணமாக சீனாவில் பாதிப்பு மீண்டும் அதிகரித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், அதே நேரத்தில் அந்நாட்டு அரசு கொரோனா குறித்த விவரங்களை வெளியிடாததால் சீனாவில் தற்போது என்ன நிலைமை நிலவுகிறது என்பது குறித்தும் மற்ற உலக நாடுகள் அச்சம் தெரிவித்துள்ளன.
தற்கொலை
இந்நிலையில் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று மருந்து கொடுக்கப்படும் நிலையில் அவர்கள் சிறுநீரகம், கல்லீரல் பாதிப்புக்கு உள்ளாகி மரணமடைவதாகவும், ஏராளமான முதியவர்கள் தற்கொலை செய்து வருவதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
பல மருத்துவமனைகள் நிரம்பி வழிவதால் அவர்கள் நகர்புறங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டிய சூழல் உள்ளது. அங்கும் கூட மருந்து தட்டுப்பாடுகள் தலைவிரித்தாடுகின்றன. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று மருந்துகள் வழங்கப்படுகின்றன.