மனித மூளையுடன் உருவாக்கப்பட்ட ரோபோ - பேராபத்தை எச்சரிக்கும் ஆராய்ச்சியாளர்கள்
மனித மூளையுடன் கூடிய ரோபோவை சீன ஆரய்ச்சியாளர்கள் உருவாக்கி உள்ளனர்.
சீனா
இந்த தொழில்நுட்ப யுகத்தில் ரோபோ குறித்த ஆராய்ச்சி முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஏஐ தொழில்நுட்பம் வளர்ந்து வந்தாலும் கூட மனித மூளை அளவுக்கு அதனால் சிறப்பாக செயல் பட முடியாது. இந்தச் சூழலில் மனித மூளையுடன் கூடிய ரோபோவை, சீன ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
சீனாவில் உள்ள டியான்ஜின் பல்கலைக்கழக மற்றும் தெற்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மனித மூளை செல்களைப் பயன்படுத்திச் செயல்படும் ரோபோக்களை உருவாக்கி உள்ளனர். மனித மூளை செல்களை உருவாக்க பயன்படுத்தும் ஸ்டெம் செல்களை இதில் பயன்படுத்தியுள்ளனர். இந்த செல்கள் சிப் உடன் இணைக்கப்பட்டு இருக்கும்.
மூளை செல்
இந்த ரோபோக்கள் மற்ற ரோபோக்களை விட முற்றிலும் மாறுபட்டவை. மற்ற ரோபோக்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட ப்ரோக்ராம் மூலம் இயங்கும். இந்த ரோபோக்களுக்கு மனித மூளை இருப்பதால் அதை வைத்து புதிய விஷயங்களை கற்றுக்கொண்டு சூழலுக்கு ஏற்ற மாதிரி தகவமைத்து கொள்ளும். குறைந்த சக்தியை பயன்படுத்தி வேகமாக கற்றுக்கொள்ளும் என ஆராச்சியாளர்கள் கூறி உள்ளனர். எதிரே உள்ள தடைகளை தவிர்க்க, கை அசைவுகளை நிர்வகிக்க போன்ற செயல்களுக்கு இந்த மூளை செல்களே ரோபோக்களுக்கு உதவுகின்றன.
மேலும் 8 லட்சம் மூளை செல்களை ஒரு சிப்பில் வளர்த்து அதை இந்த ரோபோவில் பொறுத்தியுள்ளனர். மனித நியூரான்களுக்கு ஏஐ மாடல்களை விட வேகமாகக் கற்றுக்கொள்ளும் திறன் இருப்பதால் இது அறிவியல் உலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரம் மனித மூளையை ரோபோவில் பயன்படுத்துவதால் இது மனிதர்களை மிஞ்சும் ஆற்றல் பெற வாய்ப்புள்ளது. இது மனித குலத்துக்கே பேராபத்தில் முடியும் என எச்சரிக்கின்றனர்.