அலறவிடும் கொரோனா - 10 லட்சம் பேர் பலியாகலாம் - பகீர் எச்சரிக்கை!

COVID-19 China Death
By Sumathi Dec 19, 2022 06:51 AM GMT
Report

கொரோனாவால் 10 லட்சம் பேர் பலியாகலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆட்டிப்படைக்கும் கொரோனா

கொரோனா தொற்று முதலில் சீனாவின் உகான் நகரில் ஏற்பட்டது. அதன்பின் உலக நாடுகள் முழுவதும் பரவியது. இதனை தடுக்க தடுப்பூசி, பல்வேறு நடவடிக்கைகள் என செயல்படுத்தப்பட்டது. அதன் மூலம் உலக நாடுகள் படிப்படியாக கொரோனாவின் பிடியில் இருந்து மீள தொடங்கியது.

அலறவிடும் கொரோனா - 10 லட்சம் பேர் பலியாகலாம் - பகீர் எச்சரிக்கை! | China Reports New Cases Of Corona

இந்நிலையில் தற்போது சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நாள்தோறும், 2,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டதை அடுத்து, உயிரிழப்புகளும் அதிகரித்து உள்ளன.

 எச்சரிக்கை

இதனால், அங்கு இறுதிச் சடங்கு செய்யும் சேவை நிறுவனங்களின் பணிச்சுமை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2,097 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 5,235 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுவரை உறுதி செய்யப்பட்ட பாதிப்புகள் 3,78,458 ஆக உள்ளது. இதற்கிடையில், கொரோனா கட்டுப்பாடுகளை சீனா தளர்த்தியுள்ளதால், அடுத்த ஆண்டு 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் அங்கு பலியாகும் அபாயம் உள்ளதாக அமெரிக்காவைச் சேர்ந்த, சுகாதார அளவீடு மற்றும் மதிப்பீட்டு பயிற்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.