வீடு வாங்கினா.. மனைவியே இலவசம்; ரியல் எஸ்டேட் விளம்பரம் - கடைசியில் ட்விஸ்ட்!

China
By Sumathi Jan 27, 2024 07:39 AM GMT
Report

ரியல் எஸ்டேட் நிறுவன விளம்பரம் ஒன்று சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ரியல் எஸ்டேட் 

சீனா, டிரையஜின் என்ற நகரைச் சேர்ந்த மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று, "வீடு வாங்குங்கள், மனைவியை இலவசமாகப் பெறுங்கள்" என்ற விளம்பரத்தை ஒளிபரப்பியது.

china real estate

மேலும், தொலைக்காட்சிகள், சமூக ஊடகங்கள் மற்றும் சுவர் போஸ்டர்களிலும் நிறுவனம் இந்த விளம்பரத்தை பரப்பியது. இது வாடிக்கையாளர்களை கவரும் என்ற வகையில் இந்த விளம்பரம் செய்யப்பட்ட நிலையில் அங்கு படுவைரலானது.

ரியல் எஸ்டேட் புரோக்கர்களான ஆட்சியாளர்கள் - சீமான் ஆவேசம்..!

ரியல் எஸ்டேட் புரோக்கர்களான ஆட்சியாளர்கள் - சீமான் ஆவேசம்..!

சர்ச்சை விளம்பரம்

இருப்பினும், நிறுவனத்திற்கு எதிராக பல தரப்பட்ட எதிர்ப்புகள் குவிந்தது. அதனைத் தொடர்ந்து, விளம்பரத்தைக் கொடுத்த நிறுவனத்தின்மீது, சீன அரசு நடவடிக்கை எடுத்தது.

மேலும், நிறுவனத்துக்கு ரூ.3 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த விளம்பரத்தை மக்கள் சரியாக புரிந்துகொள்ளவில்லை.

தங்கள் முயற்சியில் வீடு வாங்கி... உங்கள் மனைவிக்குக் கொடுங்கள் என்ற அர்த்தத்தில்தான் அந்த விளம்பரத்தைக் கொடுத்தோம் என நிறுவனம் தெரிவித்துள்ளது.