34 லட்சத்திற்கு பள்ளியை விற்க முயன்ற மாணவர்கள் : வெளியான அதிர்ச்சி தகவல்
34 லட்சத்திற்கு பள்ளியை விற்க முயன்ற மாணவர்களின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளியை விற்ற மாணவர்கள்
அமெரிக்காவின் ஜில்லோ என்ற ரியல் எஸ்டேட் இணையதளத்தில் விளம்பரம் கொடுத்து பள்ளியை விற்கும் முயற்சியில் மாணவர்கள் இறங்கியுள்ளனர். அடுத்த சில நேரங்களிலேயே அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக தொடங்கியது. ஜில்லோ என்ற ரியல் எஸ்டேட் இணையதளத்தில், மேரிலாந்தில் உள்ள மீட் என்ற உயர்நிலைப் பள்ளியில் பயின்ற மாணவர்கள், தங்கள் பள்ளி புகைப்படங்களை பகிர்ந்து கொண்டு “நல்லது, ஆனால் பாதி வேலை செய்யும் சிறை என்று நகைச்சுவையாக பதிவிட்டுள்ளனர்.

வைரலாகும் பதிவு
மேலும், அந்த விளம்பரத்தில் பள்ளியில் உள்ள 15 குளியலறைகளில் வடிகால் பிரச்சனை இருப்பதாகவும். அதில் ஒரு நல்ல சமையலறை மற்றும் ஒரு சாப்பாட்டு அறை உள்ளது. தனியார் கூடைப்பந்து மைதானத்தில், எலிகள், அணிகள் மற்றும் பூச்சிகள், அவை உங்களை சத்தமிட வைக்கும் என்று அந்த விளம்பரத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்த குழந்தைகள் பள்ளியின் விலை 42,069 டாலர் (34 லட்சம்) என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவு வைரலானதை தொடர்ந்து சமூக ஊடக பயனர்கள் இதைப் பற்றி கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்துசமுத்திரத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : சுனாமி அச்சுறுத்தல் குறித்து வெளியான அறிவிப்பு IBC Tamil
பதவி உயர்வின் போது ஆசிரியர்களுக்கு ஏற்படும் சம்பள பிரச்சனை: எடுக்கப்பட்டுள்ள அதிரடி நடவடிக்கை IBC Tamil
தன் மகளைப் பாதுகாக்க முடியவில்லை: அத்துமீறலுக்கு உள்ளான அனுராதபுரம் பெண் வைத்தியரின் தந்தை கண்ணீர் மல்க சாட்சி IBC Tamil