இனி வரதட்சணை முறை இல்லை; அரசு அதிரடி முடிவு - பின்னணி என்ன!
வரதட்சணை தரும் பாரம்பரிய நடைமுறைக்கு முடிவுகட்ட சீனா முயற்சித்து வருகிறது.
மக்கள் தொகை
கடந்த 60 ஆண்டுகளில், மிக மோசமான மக்கள் தொகை சரிவை நாடு சந்தித்து வருவதாக சீன அரசு சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. தொடர்ந்து அதனை அதிகரிக்க பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன்படி, திருமணத்தின் போது, மணமகனின் மாத வருவாயில் பல மடங்கு பணத்தை மணமகளின் பெற்றோருக்கு ரொக்கமாக அளிக்கும் பாரம்பரிய வழக்கம் பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. திருமண நிச்சயத்தின் போது, மணமகள் வீட்டாருக்கு இந்த தொகையை மணமகன் அளிக்க வேண்டும்.
வரதட்சணை
மணமகனின் நேர்மை மற்றும் செல்வத்தை மணமகள் வீட்டாருக்கு உணர்த்தவும், இத்தனை ஆண்டுகள் பெற்றோர் தங்கள் பெண்ணை வளர்த்ததற்கான செலவை ஈடு செய்யவும் இந்த தொகை வழங்கப்படுகிறது. நான்கில் மூன்று திருமணங்கள் இந்த நடைமுறைப்படி நடப்பதாக கூறபப்டுகிறது.
எனவே, இந்த வரதட்சணை நடைமுறைக்கு முடிவு கொண்டு வர சீன அரசு முடிவு செய்துள்ளது. வரதட்சணை வேண்டாம் என அறிவிக்கும் மணமகள் வீட்டாரை, 'சிறந்த பெற்றோர்' என, கவுரவித்து, பரிசு வழங்கும் அறிவிப்புகளையும் சில மாநிலங்கள் நடைமுறைப்படுத்தி உள்ளன.
மேலும், பிறந்த குழந்தைகளுக்கான மானிய தொகையை அரசு அதிகரித்துள்ளது, திருமணத்துக்கு வழங்கப்படும் விடுப்பு நாட்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன. திருமணம் செய்து கொள்ளாமல் பெற்றுக் கொள்ளப்படும் குழந்தையை முறைப்படி பதிவு செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.