நொடியில் விழுந்து நொறுங்கிய புதிய பாலம் - வைரலாகும் திக் திக் வீடியோ!

Viral Video China
By Sumathi Nov 12, 2025 03:59 PM GMT
Report

புதிதாக திறக்கப்பட்ட பாலம் ஒன்று இடிந்து விழுந்துள்ளது.

 இடிந்த பாலம்  

சீனா, சிச்சுவான் மாகாணத்தில் புதிதாக திறக்கப்பட்ட பாலம் ஒன்று இடிந்து விழுந்துள்ளது. மார்காங் பகுதியில் அமைந்துள்ள இந்த 'ஹாங்கி பாலம்' (Hongqi bridge) 758 மீட்டர் நீளம் கொண்டது.

china

மத்திய பகுதிகள் மற்றும் திபெத் ஆகியவற்றை இணைக்கும் முக்கிய தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதியாக இந்தப் பாலம் கட்டப்பட்டது. இது கட்டப்பட்டிருந்த மலைப்பகுதி மற்றும் அருகிலுள்ள சாலைகளில் திடீரென விரிசல்கள் காணப்பட்டன.

மேலும் மலைப்பகுதியில் நில நகர்வுகள் இருப்பதையும் பொறியாளர்கள் கண்டறிந்துள்ளனர். உடனே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறை பாலத்தை போக்குவரத்திற்காக மூடியது. தொடர்ந்து, மலைப்பகுதி சரிந்து பாலத்தின் மீது விழுந்தது.

2026-ல் கோடீஸ்வரராகும் 5 ராசிகள் - பாபா வாங்கா கணிப்பு!

2026-ல் கோடீஸ்வரராகும் 5 ராசிகள் - பாபா வாங்கா கணிப்பு!

ஷாக் வீடியோ

இதில் பாலத்தின் ஒரு பகுதி உடைந்து கீழே இருந்த ஆற்றில் விழுந்தது. நிலச்சரிவு மற்றும் பாலத்தின் கட்டமைப்பின் பலவீனம் காரணமாக இந்த விபத்து நிகழ்ந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பான காட்சிகள் மற்றும் அதனால் ஏற்பட்ட புகை மண்டலத்தின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகின.

சிச்சுவான் என்ற குழுமத்தால் (Sichuan Road & Bridge Group) கட்டப்பட்ட இந்த பாலம், இந்த ஆண்டின் தொடக்கத்தில்தான் கட்டி முடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.