ரேடரில் சிக்காது; உளவு பார்க்க அதிர்ச்சி கண்டுபிடிப்பு - மிரளும் உலக நாடுகள்

China
By Sumathi Jun 27, 2025 10:02 AM GMT
Report

சீனா கொசு வடிவில் மைக்ரோ டிரோனை வடிவமைத்துள்ளது.

கொசு வடிவில் ட்ரோன்

சீன விஞ்ஞானிகள் ராணுவ நடவடிக்கைகளுக்காக, கொசு அளவுள்ள மிகச் சிறிய ட்ரோனை உருவாக்கியுள்ளனர். இந்த மைக்ரோ ட்ரோன்,

ரேடரில் சிக்காது; உளவு பார்க்க அதிர்ச்சி கண்டுபிடிப்பு - மிரளும் உலக நாடுகள் | China Mosquito Sized Military Drone Viral

மத்திய சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள தேசிய பாதுகாப்பு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் ரோபோடிக்ஸ் ஆய்வகத்தால் உருவாக்கப்பட்டுள்ளது.

இது இரண்டு சிறிய இறக்கைகளையும், அவற்றின் இருபுறமும் இலை போன்ற அமைப்புகளையும் கொண்டுள்ளது. மேலும், மூன்று முடி போன்ற மெல்லிய கால்களுடன், சுமார் 1.3 சென்டிமீட்டர் நீளம் இருந்தது.

3ஆம் உலகப்போர் வந்தாலும்.. இந்த நாடுகள் சேஃப் - எதெல்லாம் தெரியுமா?

3ஆம் உலகப்போர் வந்தாலும்.. இந்த நாடுகள் சேஃப் - எதெல்லாம் தெரியுமா?

அசத்திய சீனா

இந்த டிரோனில் பொருத்தப்பட்டுள்ள கேமரா மற்றும் மைக்ரோபோன்கள் புகைப்படம் எடுப்பதுடன், உரையாடல்களை பதிவு செய்து,

china drone mosquito

அதனை பரிமாற்றம் செய்யும். எந்தவித சத்தமும் எழுப்பாமல் பறக்கக்கூடிய இந்த டிரோன் ரேடாரிலும் புலப்படாது என்று அந்நாட்டு அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஏற்கனவே நார்வே தயாரித்த உள்ளங்கை அளவிலான டிரோன்களைப் பயன்படுத்தி வரும் அமெரிக்கா, கரப்பான் பூச்சி, வண்டுகள் ஆகியவற்றின் வடிவில் டிரோன்களை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.