எல்லாம் காதலுக்காக - தினமும் 320 கி.மீ பயணம் செய்யும் நபர்

China
By Karthikraja Jul 20, 2024 09:45 AM GMT
Karthikraja

Karthikraja

in உலகம்
Report

காதலுக்காக ஒரு நபர் தினமும் 320 கி.மீ பயணம் செய்து வருகிறார். 

சீனா

சீனாவின் கிழக்கே ஷான்டாங் மாகாணத்தில் வெய்பாங் நகரில் வசித்து வருபவர் 31 வயதான லின் ஷு. 7 ஆண்டுகளாக காதலித்து வந்த பெண்ணை கடந்த மே மாதம் திருமணம் செய்து கொண்டார். 

lin shu china

திருமணத்திற்கு முன்பு, தங்கியிருந்த இடத்தில் இருந்து ஒரு மணிநேர பயண நேரத்தில் வேலை செய்யும் இடத்திற்கு லின் சென்று விடுவார். ஆனால், திருமணமான பின் மனைவியுடன் அதிக நேரம் செலவிட விரும்பியுள்ளார். 

வலியில்லாமல் சாக கண்டுபிடிக்கப்பட்ட இயந்திரம் - எவ்வளவு, எப்படி செயல்படும் தெரியுமா?

வலியில்லாமல் சாக கண்டுபிடிக்கப்பட்ட இயந்திரம் - எவ்வளவு, எப்படி செயல்படும் தெரியுமா?

பயணம்

லின்னின் மனைவிக்கு சொந்த ஊர் வெய்பாங் நகரில் உள்ளதால், அந்த ஊரிலேயே வசிப்பது பாதுகாப்பானது என அவர் உணர்ந்துள்ளார். இதனால் லின்னும், மனைவிக்காக அந்த ஊரிலேயே ஒரு வீட்டில் குடியேறியுள்ளார். தற்போது அவர் வசிக்கும் வீட்டுக்கும், அலுவலகத்திற்கும் இடையே 160 கி.மீ. தொலைவு உள்ளது. இதனால், வேலைக்கு சென்று, திரும்ப அவர் தினமும் 320 கி.மீ. தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. 

lin shu china

இதன்படி, தினமும் அதிகாலை 5 மணிக்கு எழும் அவர், வெய்பாங்கில் உள்ள வீட்டில் இருந்து காலை 5.20 மணியளவில் புறப்பட்டு பைக்கில் 30 நிமிட நேரம் பயணித்து ரெயில் நிலையம் சென்றடைகிறார். அங்கு, காலை 6.15 மணியளவில் ரெயிலேறும் அவர், குயிங்டாவோ நகருக்கு காலை 7.46 மணிக்கு சென்று சேர்கிறார். அதன்பின் ரெயிலில் இருந்து இறங்கி 15 நிமிடம் நடந்து அலுவலகம் சென்று சேர்கிறார்.

காலை 9 மணிக்கு அலுவலகம் செல்லும் அவர், பணி முடிந்ததும், 3 முதல் 4 மணிநேரம் பயணம் செய்து ,மீண்டும் வீட்டை அடைகிறார். தினமும் இவ்வளவு தூரம் பயணம் செய்கிறாரா என சமூக ஊடகத்தில் பலரும் அதிர்ச்சி தெரிவித்து இருக்கின்றனர்.

போக்குவரத்து வசதி

இது பற்றி பேசிய லின், எல்லாம் மனைவி மீது கொண்ட காதலுக்காக தான். மனைவியுடன் அதிக நேரம் செலவிட விரும்பினேன். இந்த நீண்ட பயணம் சலிப்பூட்டவில்லை. போக்குவரத்து வசதியும் உதவியாக உள்ளது, அலுவலக மேலாளரும் நிலைமையை புரிந்து கொண்டு கூடுதல் நேரம் வேலை செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பதில்லை என கூறியுள்ளார்.

மேலும் இது ஒரு தற்காலிக பயணம் தான். குயிங்டாவோவில் தன்னுடைய மனைவி வேலை தேடி வருகிறார் என்றும் வேலை கிடைத்ததும் அந்நகரிலேயே வசிக்க திட்டமிட்டு உள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.