பேண்ட் உள்ளே உயிருடன் 100 பாம்பு - கையும் களவுமாக பிடித்த சுங்கத்துறை
100 க்கு மேற்பட்ட பாம்புகளை தனது பேண்ட் உள்ளே வைத்து கடத்த முயன்று கைது ஆகியுள்ளார்.
சீனா
ஹாங்காங்கிலிருந்து சீனாவின் ஷென்ஸென் (Shenzhen) நகருக்குச் செல்லும் வழியில் ஒரு நபரை சுங்கதுறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அவர் ஆறு பைகளை சீல் செய்து தனது பேண்ட் உள்ளே மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.
அந்த பைகளைத் திறந்து சோதனை செய்தபோது, ஒவ்வொரு பைக்குள்ளும் வெவ்வேறு அளவில், வெள்ளை, இளஞ்சிவப்பு, சிவப்பு போன்ற நிறங்களைக் கொண்ட பாம்புகள் உயிருடன் இருந்துள்ளன.
பாம்பு
மொத்தம் 104 பாம்புகளை அவர் கடத்த முயன்றதாக சோதனையில் ஈடுபட்ட சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அதில், பல பாம்புகள் சீன நாட்டு இனத்தைச் சேராதவை. சீன நாட்டு பூர்விகமற்ற உயிரினங்களை அங்கு கொண்டு வருவதற்கு தடை விதித்துள்ளது.
விலங்குகள் கடத்தலில் சீனா உலக அளவில் முக்கிய மையமாக உள்ளது. இத்தகைய கடத்தலில் ஈடுபடும் நபர்களுக்கு கடும் தண்டனை விதிக்கப்படும் என சீன சுங்கதுறை அதிகாரிகள் தெரிவித்தனர்.