விவாகரத்து கேட்ட மனைவியை தூக்கிக்கொண்டு ஓடிய கணவர் - நீதிமன்றத்தில் நடந்த சம்பவம்
விவாகரத்து கோரிய மனைவியைப் பிரிய மனமில்லாத கணவர், தோளின் மேல் தூக்கிக்கொண்டு நீதிமன்றத்திலிருந்து தப்பி ஒடியச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சீனா
சீனாவைச் சேர்ந்தவர்கள் லீ -சென் தம்பதியினர்.இவர்களுக்குத் திருமணமாகி 20 வருடங்களைக் கடந்துள்ளனர். இந்த நிலையில் தம்பதிகளுக்கு இடையே அடிக்கடி சண்டனை ஏற்பட்டுள்ளது.
இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத மனைவி சென், ஒரு நாள் விவாகரத்துக்குக் கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் கணவர் தன்னிடம் சண்டைபோட்டுக்கொண்டே இருப்பதாகவும், கொடுமைப்படுத்தியதாகவும் தெரிவித்து தங்களுக்கு விரைவில் விவாகரத்து வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த மனு மீதான விசாரணை அந்நாட்டு நீதிபதி முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி, “கணவன் மனைவி இருவரும் இணைந்து வாழச் சம்பந்தம் உள்ளதா?” என்று கேட்டுள்ளனர். இதற்குக் கணவன் லீ விவாகரத்தில் தனக்கு விருப்பம் இல்லை என்று தெரிவிக்கவே, மனைவி விவாகரத்து வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
விவாகரத்து
ஒரு கட்டத்தில், மனைவி தன்னை விட்டுப் பிரிந்துவிடுவார் என்று உணர்ந்த கணவர்,மனைவியைத் தோளில் தூக்கிவிட்டு, நீதிமன்றத்திலிருந்து ஒரே ஓட்டமாக ஓடியுள்ளார். அதனைக் கண்ட அதிகாரிகாரிகள் லீ-யை பிடித்து மீண்டும் நீதிபதி முன் நிறுத்தினர்.
இவர்களது காதலை உணர்ந்த நீதிபதி இன்னும் ஒரேயொரு வாய்ப்பு உங்களுக்குத் தருகிறேன். லீ இனி மேல் இவ்வாறு செய்யக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்து மன்னிப்பு கடிதம் ஒன்றினை எழுதிக் கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
இதை பார்த்தல் தமிழ் சினிமாவில் வெளியான ஓ மை கடவுளே படம் தான் நியாபகம் வருகிறது