அது ராணுவ ரகசியம் - சீன விவகார கேள்விக்கு மத்திய அரசு பதில்!
சீன விவகாரம் குறித்த ரவிக்குமார் எம்.பி கேள்விக்கு பதில் தர மத்திய அரசு மறுத்துள்ளது.
சீன விவகாரம்
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில், மது எல்லையைக் காக்க நமது அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன?” என்ற கேள்வியைக் குறுகியகால வினாவாக விழுப்புரம் எம்.பி., ரவிக்குமார் எழுப்பியிருந்தார். அதற்கு மத்திய அரசு சார்பில்,

“பாதுகாப்பு அமைச்சகம் பதிலில், ‘இந்தத் தகவல் தேசிய பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், இந்த விஷயம் ரகசியம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது”என்று தெரிவித்துள்ளது.
ராணுவ ரகசியம்
மேலும் இதுகுறித்து ரவிக்குமார் எம்.பி., கூறுகையில், “சீன ராணுவம் நமது நாட்டுக்குள் நுழைந்து நூற்றுக் கணக்கான கிலோ மீட்டர் நிலப்பரப்பை ஆக்கிரமித்துக் கொண்டிருப்பதோடு பல்லாயிரக் கணக்கான துருப்புகளையும் நிலைநிறுத்தி வைத்திருக்கிறது என செய்திகள் வெளியாகியுள்ளன.
அதுகுறித்த உண்மை நிலையை இந்திய ஒன்றிய அரசு தெரிவிக்க மறுப்பது அந்தச் செய்திகளை உறுதிப்படுத்துவதாகவே இருக்கிறது.” எனத் தெரிவித்துள்ளார்.