தமிழகத்தை உளவு பார்க்கும் சீன கப்பல் ? : பலிகடா ஆன இலங்கை .. பின்னணி என்ன?
சீன அரசின் அதி நவீன உளவுகப்பலாக கூறப்படும் யுவான் வாங் கப்பலானது நேற்று இலங்கையின் ஹம்பந்தேட்டை துறைமுகத்தில் நிலை நிறுத்தியது.
இந்தியா , அமெரிக்கா போன்ற நாடுகளின் எதிர்ப்பை மீறி இலங்கையில் சீன அரசின் உளவு கப்பல் ஹம்பந்தேட்டையில் நங்கூரமிட்டுள்ளது .இந்தியாவின் எல்லை பகுதிகளுக்கு அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது.
இலங்கைக்கு சீன கப்பல் வந்து முகாமிட்டுள்ளதற்கு ஏன் இந்தியா வரிந்து கட்டிக்கொண்டு கடற்கரை எல்லையினை கவனிக்க வேண்டும் ? சீன கப்பலால் இந்தியாவுக்கு அப்படி என்ன தலைவலி? அந்த சீன கப்பலில் என்னதான் உள்ளது வாருங்கள் தெரிந்துகொள்வோம் சீன உளவாளி கப்பல் குறித்து.
இந்தியா சீனா எல்லை விவகாரம்
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் நேரு பிரதமராக இருந்த போதே உருவான எல்லை சண்டை தற்போது வரை பனிப்போராக தொடர்கிறது, என்னதான் சமாதன உடன் படிக்கைகளை போட்டாலும் சீனா அதனை மீறி எல்லையினை கடந்து இந்தியாவுக்கு தொல்லை கொடுத்து வருவது தொடர் கதையாகத்தான் உள்ளது.
இது வரை சீன அரசு இந்தியாவினை வடக்கு பகுதிகளில் மட்டுமே தொல்லை கொடுத்து வந்தது , இந்தியாவின் தென்பகுதிகளில் சீன அரசினால் நுழைய முடியவில்லை .
இந்த நிலையில் தான் இலங்கையில் உள்ள முக்கியமான துறைமுகமான ஹம்பந்தேட்டை துறைமுகமத்தை சீனாவுக்கு 99 வருடங்களுக்கு குத்தகைக்கு கொடுத்துள்ளது இலங்கை .
இதனை தனக்கு சாதகமாக பயனபடுத்தியுள்ள சீன அரசு தனது அதி நவீன உளவு கப்பலான யுவான் வாங் 5 கப்பலை நேற்று இலங்கையில் அதிகாரப்பூர்வமாக நங்கூரமிட்டது.
இந்தியாவுக்கு என்ன தலைவலி
சீனாவின் பாதுகாப்புக்கு பயன்படுத்தப்படும் உளவு கப்பல்களில் பயன்படுத்தப்படும் வார்த்தை யுவான் வாங்க் . யுவான் வாங்க் பெயரில் 7 கப்பல்கள் இந்திய மற்றும் பசிபிக் பெரும் கடலில் சீன உளவு கப்பல்கள் சுற்றி வருகின்றன.
இந்த யுவாங் 7 கப்பலில் பல்வேறு வசதிகள் உள்ளன, 222 மீட்டர் நீளமும் 26 மீட்டர் அகலமும் கொண்ட இந்த கப்பலில் அதி நவீன வசதிகள் செயற்கை கோளுடன் மிக துல்லியமானதொடர்பை கொண்டவை சுமார் 11 ஆயிரம் எடை கொண்ட பொருட்களை தாங்கும் தன்மை கொண்டது.
தற்போது இந்த கப்பலில் 400 பேர் பணியாற்றி வரும் நிலையில் கப்பல் நிறுத்தபட்டிருக்கும் பகுதியில் இருந்து சுமார் 750 கி.மீ வரை உளவுபார்க்க முடியும்.
தென்பகுதியை குறிவைக்கும் சீனா
ஆக இலங்கை துறைமுகத்தில் உள்ள தங்களது உளவு கப்பல் மூலமாக இந்தியாவின் முக்கிய ராக்கெட் ஏவுதளமான ஸ்ரீஹரிகோட்டா ,கல்பாக்கம் அணுமின் நிலையம் கூடங்குளம் அணுமின் நிலையம் போன்றவற்றை துல்லியமாக சீன அரசினால் கண்கானிக்க முடியும் என கூறப்படுகிறது.
யுவான் கப்பலானது ராணுவத்திற்கானது அல்ல ஆய்வுக்காக மட்டுமே என சீன அரசாங்கம் கூறினாலும் இந்த கப்பல் மிகவும் ஆபத்தான உளவு கப்பல் என்று அமெரிக்க உளவுத்துறை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாகிஸ்தானின் தைமூர் போர் கப்பல் இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் முகாமிட்டது இந்த கப்பலும் சீனாவின் தயாரிப்பு என்பது இங்கு மிகவும் கவனிக்க தக்கது.
ஒரே சமயத்தில் இந்தியாவுக்கு எதிராக உள்ள நாடுகளின் இரு கப்பல்கள் இலங்கையில் முகாமிட்டுள்ளது இந்தியாவின் புருவங்களை உயர்த்தியுள்ளது.
விளக்கம் கொடுத்த ரணில்
இந்த நிலையில் உளவு கப்பல் குறித்து இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க பேசுகையில் :
தற்போது இலங்கை துறைமுகத்திற்கு வந்துள்ள கப்பலை சீனா இராணுவ நோக்கங்களுக்காக பயன்படுத்த இலங்கை அனுமதிக்க்காது என்றும், சீன கப்பல் ஆராய்ச்சிக்காக வந்துள்ளதாகவும் அதானல் தான் ஹம்பன்தோட்டா வர அனுமதித்துள்ளதாக கூறினார்.
உஷாராகும் இந்தியா
ஆனால் பொதுவாக வல்லரசு நாடுகள் ஒரு நாட்டின் மீது போர் தொடுக்கும் முன்பு அந்த நாட்டின் தகவல் தொழில் நுட்பங்களை முடக்குவது வழக்கம் தற்போது இலங்கையில் வந்துள்ள உளவு கப்பலில் அத்தகைய கருவிகள் உள்ளதால் , தென் இந்தியாவில் உள்ள ராணுவ நிலையங்களையும், அணுமின் நிலையங்களிலும் இந்திய அரசு உஷார் நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது. குறிப்பாக தமிழக கடலோர பகுதிகள் உண்ணிப்பாக கவனித்து வருகிறது.
அதே சமயம் இலங்கையின் யுவாங் கப்பல் ஹம்பந்தேட்டா துறைமுகம் வந்தடையும் முன்பே இந்தியா தனது உளவு விமானத்தை இலங்கைக்கு வழங்கியுள்ளது. மேலும் இது குறித்து சில உலகளாவிய வல்லுநர்கள் தங்கள் கருத்தினை கூறுகையில் :
கொரோனா பேரிடருக்கு பிறகு இலங்கைக்கு சீன அரசு அதிகாரப்பூர்வமாக எந்த உதவியும் செய்யவில்லை , கொரோனா பொருளாதார நெருக்கடி போன்ற சமயங்களில் இந்தியா உடனடியாக உதவி செய்துள்ளது.
தற்போது இலங்கையில் ஆட்சி மாற்றம் நடந்துள்ள நிலையில் இலங்கையின் மீது எங்களுக்கும் அதிகாரமும் உரிமையும் உள்ளது என்பதை சீனா காட்டவே இந்த கப்பல் வந்துள்ளது என கூறுகின்றனர்.
சங்கடத்தில் ரணில்
அதே சமயம் சமாதானத்தை பேச கைகளை நீட்டி பின்பு கழுத்தில் கை வைக்கும் சீனாவின் நாடகத்தை இந்தியா தனது அனுபவத்தில் புரிந்து வைத்துள்ளது, இந்த சமயத்தில் கடும் சங்கடத்தில் இருப்பது இலங்கை என்றே கூறவேண்டும்.
மத்தளத்திற்கு எந்த பக்கம் திரும்பினாலும் அடிதான் என்பது போல இலங்கை அரசும் அதிபர் ரணிலும் உள்ளனர் என்றே கூறவேண்டும் சீன உளவு கப்பலுக்கு இலங்கை அனுமதி வழங்கியுள்ளதால் இந்தியா இலங்கை உறவில் விரிசல் வந்துள்ளது.
ஆக இனிவரும் காலங்களில் ரணிலுக்கு பெரும் சவால்கள் உள்ளன , அதே சமயம் சீனக் கப்பல் விவகாரத்தில் மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.