டிரோன் மூலம் கண்காணிக்கப்பட்ட மனைவி - அதிர்ச்சியில் கணவர் செய்த செயல்!
மனைவியை டிரோன் கேமரா பயன்படுத்தி கண்காணித்த கணவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
சீனா
சீனா ஹூபே மாகாணத்தில் உள்ள சியான் நகரை சேர்ந்தவர் 33 வயதான ஜிங். இவரின் மனைவி கடந்த ஒரு வருடமாக இவரிடம் ஆக்ரோஷமாக நடந்து கொண்டுள்ளார். மேலும் பெற்றோரை பார்க்க செல்வதாக கூறி அடிக்கடி தனியாக வெளியே சென்றுள்ளார்.
இதனால் மனைவியின் நடத்தை மீது சந்தேகம் கொண்ட ஜிங் அவரின் செயல்பாடுகளை கண்காணிக்க முடிவெடுத்தார். இதற்காக ட்ரோனை பயன்படுத்தி மனைவியை பின் தொடர்ந்துள்ளார்.
விவாகரத்து
இதில் காரில் இருந்து இறங்கிய அவரது மனைவி வேறு ஒரு ஆணுடன் மலைப்பகுதிக்கு கைகளை பிடித்து நடந்து செல்கிறார். இதன் பின் இருவரும் ஒரு பழைய மண் குடிசைக்குள் நுழைந்து 20 நிமிடங்கள் கழித்து அங்கிருந்து வெளியேறி அலுவலகம் செல்லும் காட்சிகள் டிரோன் கேமரா மூலம் அம்பலமானது.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ஜிங் அவரது மனைவி அவரது நிறுவன உரிமையாளருடன் கள்ள உறவில் இருந்து கொண்டு, தன்னை ஏமாற்றுவதை கண்டுபிடித்துள்ளார். இந்த டிரோன் வீடியோவை ஆதாரமாக வைத்து மனைவியை விவாகரத்து செய்ய ஜிங் முடிவு செய்துள்ளார்.