பீரியட்ஸ் கடைசியாக எப்போது வந்தது? போன் போட்டு நச்சரிக்கும் அரசு அதிகாரிகள்
பீரியட்ஸ் எப்போது வந்தது என அரசு அதிகாரிகள் பெண்களுக்கு போன் செய்து விசாரித்து வருகின்றனர்.
சீனா
உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக சீனா இருந்து வந்தது. இதனால் மக்கள் தொகை விகிதத்தை கட்டுப்படுத்த சீன அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது.
இதன் பலனாக சீனா மக்கள் தொகையில் 2வது இடத்திற்கு சென்றது. மக்கள் தொகையில் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடத்தில் உள்ளது. ஆனால் சீன அரசு எதிர்பார்த்ததை விட பிறப்பு விகிதம் வெகுவாக குறைந்துள்ளது.
குறைந்த பிறப்பு வீதம்
இதனையடுத்து நாம் இருவர் நமக்கு ஒருவர் எனும் திட்டத்தை சீன அரசு கைவிட்டது. மக்கள் தொகையை மீட்டெடுக்கும் திட்டத்தை சீன அரசு கையில் எடுத்துள்ளது. இதற்காக பல்வேறு அதிகாரிகளை நியமித்துள்ளது.
இந்த அதிகாரிகள் திருமணமான பெண்களுக்கு அடிக்கடி போன் செய்து, எப்போது கர்ப்பமாவீர்கள், கடைசியாக எப்போது மாதவிடாய் வந்தது என நச்சரித்து வருகின்றனர். நாட்டிற்காக அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ளுங்கள் என வேண்டுகோள் வைக்கின்றனர். மக்கள் தொகை சரிவு பிரச்னை ஒட்டுமொத்த உலக நாடுகளையும் பாதித்து வருகிறது.
ரஷ்யா, ஜப்பான் போன்ற நாடுகள் மக்கள் தொகையை அதிகரிக்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். சமீபத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உள்ளிட்டோர் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என பேசினர்.