Dad's little Princess.. பழிவாங்க நண்டை உயுருடன் விழுங்கிய நபர் - கடைசியில் நடந்தது என்னவோ!
மகளைக் கடித்த நண்டைப் பழிவாங்குவதற்காக அதை உயிரோடு விழுங்கிய தந்தையின் செயல் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகள் பாசம்
சீனாவைச் சேர்ந்தவர் லு(39). இவர் தன்னுடைய மகளுடன் நண்டு விற்பனை நிலையத்துக்குச் சென்றிருக்கிறார். அப்போது தன்னுடைய மகளை நண்டு ஒன்று கடித்திருக்கிறது. இதைக் கண்டவர், தன்னுடைய மகளுக்காக அந்த நண்டைப் பழிவாங்குவதாக எண்ணி,

உயிரோடிருந்த அந்த நண்டை அப்படியே முழுவதுமாக விழுங்கியிருக்கிறார். இந்தச் சம்பவம் நடந்து 2 மாதங்களுக்குப் பிறகு, திடீரென அவருக்கு முதுகுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவர்களை பார்த்ததில், அவருடைய மார்பு, வயிறு, கல்லீரல் மற்றும் செரிமான அமைப்பில் நோயியல் மாற்றங்கள் இருப்பதைக் கண்டறிந்துள்ளனர்.
பழிவாங்கிய அப்பா
தொடர்ந்து, மருத்துவர்கள் அவரிடம் ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடிய உணவை சாப்பிட்டீர்களா என கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் அப்படியெல்லாம் இல்லை என மறுக்க, அவரது மனைவி அவர் நண்டு சாப்பிட்ட சம்பவத்தை மருத்துவர்களிடம் தெரிவித்துவிட்டார்.

அதனையடுத்து, அதுகுறித்து லுவிடன் கேட்டதற்கு ஒரு நண்டு என் மகளை கடித்துவிட்டது. அதனால் நான் அதை என் மகளுக்காகப் பழிவாங்க விரும்பினேன். அதனால்தான் அப்படிச் செய்தேன்" என லு பதிலளித்திருக்கிறார்.
அதைத் தொடர்ந்து மருத்துவர்கள் லு-வின் ரத்த மாதிரிகளைப் பரிசோதனை செய்ததில், நண்டு சாப்பிட்டதால் ஒட்டுண்ணிகளால் அவர் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. சிகிச்சைக்குப் பிறகு லு குணமடைந்து மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.