மீனவரின் வலையில் சிக்கிய மனித பற்கள் கொண்ட ஆட்டு தலை கொண்ட அபூர்வ மீன்!

entertainment
By Nandhini Aug 06, 2021 12:50 PM GMT
Report

மீனவர் ஒருவர் வலையில் மனித பற்களுடன் கூடிய மீன் ஒன்று சிக்கிய புகைப்படம் தற்போது சமூகவலைத்தளத்தில் அதிகமாக வைரலாகி வருகிறது.

அமெரிக்காவின் வடக்கு கரோலினா பகுதியைச் சேர்ந்தவர் நாதன் மார்டின். இவர் மீன் பிடி தொழில் செய்து வருகிறார். இவர் இவரது சகோதரர் உடன் சில தினங்களுக்கு முன்பு மீன் பிடிக்க கடலுக்கு சென்றிருந்தார்.

அப்பொழுது அவரது வலையில் அரிய வகை ஆட்டு தலை மீன் ஒன்று சிக்கியது. இந்த மீன் பார்ப்பதற்கு மனிதர்களுக்கு இருக்கும் பல்லை போல இருந்தது. ஆடுகளுக்கு இருக்கும் தலையை போலவே இருந்தது. இந்த மீனை ஏழைகளின் நண்டு என அந்நாட்டு மக்கள் அழைக்கிறார்களாம். மேலும், இந்த மீனைப் பிடிப்பது சுலபமாம். அதேப்போல் இந்த மீனை சமைத்து சாப்பிடும் போது நண்டை போலவே சுவையாக இருக்குமாம்.

இந்த அரிய வகையான மீன்கள் பாறை இடுக்குகளில்தான் வாழுமாம். அதனால் இந்த மீன் வலையில் சிக்குவது கடினம். இவர் பிடித்த இந்த மீனிற்கு வாயில் மனிதர்களுக்கு இருப்பது போல முன்பக்கம் மட்டும் இல்லாமல் உள்ளே பல வரிசையில் பற்கள் இருந்தன. அதிலும், முக்கியமாக கீழ் வரிசையில் இருந்த பற்கள் கூர்மையாக இருந்தது. தற்போது இந்த மீனின் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.   

மீனவரின் வலையில் சிக்கிய மனித பற்கள் கொண்ட ஆட்டு தலை கொண்ட அபூர்வ மீன்! | Entertainment

மீனவரின் வலையில் சிக்கிய மனித பற்கள் கொண்ட ஆட்டு தலை கொண்ட அபூர்வ மீன்! | Entertainment