கனடா பிரதமருடன் சீன அதிபர் நேருக்கு நேர் மோதல்: பகீர் வீடியோ - விளக்கம்!

Viral Video China Canada
By Sumathi Nov 18, 2022 03:40 AM GMT
Report

சீன அதிபர் கனடா பிரதமரை அச்சுறுத்தவில்லை என சீன வெளியுறவுத்துறை விளக்கம் அளித்துள்ளது.

ஜி20 மாநாடு

இந்தோனேஷியாவில் உள்ள பாலி தீவில் கடந்த 15ஆம் தேதி தொடங்கிய ஜி20 மாநாடு நிறைவு பெற்றது. இதில் உலக நாடுகளின் தலைவர்கள் கலந்துக் கொண்டனர். இந்நிலையில், சீன அதிபர் ஷி ஜின்பிங், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இருவரும் ஆலோசனை நடத்தும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியது.

கனடா பிரதமருடன் சீன அதிபர் நேருக்கு நேர் மோதல்: பகீர் வீடியோ - விளக்கம்! | China Explain Justin Trudeau And Xi Jinping Video

அதில், ஷி ஜின்பிங் கூறியதை மொழி பெயர்ப்பாளர் ஒருவர் மொழிபெயர்த்து கூறுகிறார். சீன அதிபர் ஷி ஜின்பிங் கூறுகையில், "நாம் இருவரும் ஆலோசனை நடத்தியதை பேப்பரில் கசிய விடுகிறீர்கள். இது முறையானது அல்ல. ஆலோசனை நடத்திய விதம் அப்படி அல்ல. உங்களிடம் நேர்மை இருந்தால் பரஸ்பர மரியாதையுடன் நாம் நன்றாகத் தொடர்பு கொள்ளலாம்,

உரையாடல்

இல்லையெனில் முடிவுகள் அவ்வளவு எளிதாக இருக்காது" என்று கூறுகிறார். அதற்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, "நாங்கள் சுதந்திரமான, வெளிப்படையான மற்றும் தைரியமான பேச்சுவார்த்தையில் நம்பிக்கை கொண்டுள்ளோம். அதையே நாங்கள் தொடர்ந்து நடத்துவோம். நாம் ஆக்கப்பூர்வமாக பணியாற்றுவதை தொடர்வோம்," என தெரிவித்தார்.

அதற்கு பதில் அளித்த ஷி ஜின்பிங், "அப்படியானால், முதலில் நிபந்தனைகளை விதித்து கொள்வோம்" எனக் கூறி ஜஸ்டின் ட்ரூடோவுடன் கைகுலுக்கிச் சென்றார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சீன வெளியுறவுத்துறை விளக்கம் அளித்துள்ளது.

விளக்கம்

அதில், ‘‘குறிப்பிட்ட வீடியோ ஜி20 மாநாட்டின் போது இரு தலைவர்களும் நடத்திய குறுகிய உரையாடல். இது மிகவும் சாதாரணமானது. தலைவர் ஷி யாரையும் விமர்சிப்பதாகவோ அல்லது குற்றம் சாட்டுவதாகவோ இதைப் புரிந்து கொள்ள வேண்டாம்.

இரு தலைவர்களும் சாதாரண பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, தங்களது நிலைப்பாடுகளை வெளிப்படுத்துவதால், ஜின்பிங் ட்ரூடோவிடம் "இல்லையெனில் முடிவுகள் அவ்வளவு எளிதாக இருக்காது" என்று ஜின்பிங் கூறியது அச்சுறுத்தல் அல்ல’’ என்றும் மாவோ நிங் கூறியுள்ளார்.