ஷாங்காய் உச்சி மாநாட்டில் சீன அதிபரை பார்த்தும் பார்க்காததுபோல் நின்ற பிரதமர் மோடி...!
ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாடு
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியா, சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், ரஷியா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய 8 நாடுகள் உறுப்பினர்களாக இருக்கிறது. உச்சி மாநாடு கடைசிய கடந்த 2019ம் ஆண்டு நடந்தது. அதன் பிறகு கொரோனா காரணமாக உச்சி மாநாடு நடைபெறவில்லை.
இந்த ஆண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாடு உஸ்பெகிஸ்தான் நாட்டின் சமர்கண்ட் நகரில் நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்பட 15 உலக நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினம் மாலை தனி விமானம் மூலம் பிரதமர் நரேந்திர மோடி கிளம்பி உஸ்பெகிஸ்தானின் சமர்கண்ட் நகரை சென்றடைந்தார். பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் உஸ்பெகிஸ்தான் பிரதமர் அப்துல்லா அரிப்போவ் சிறப்பான வரவேற்பு கொடுத்தார்.
சீன அதிபரை கண்டுக்கொள்ளாத பிரதமர் மோடி
நேற்று இந்த உச்சி மாநாட்டில், இந்திய - சீன படைகளுக்கு இடையேயான கடந்த 2020ம் ஆண்டு நடைபெற்ற கல்வான் பள்ளத்தாக்கு தாக்குதல் நிகழ்வுக்கு பின்பு முதல்முறையாக சீன அதிபர், இந்திய பிரதமர் மோடி நேருக்கு நேர் சந்தித்தனர். ஒரே மேடையில் இருவரும் பங்கேற்றேனர்.
ஆனால், இந்த மாநாட்டில் சீன அதிபர் ஷி ஜின்பிங் ஐ பார்த்து பிரதமர் மோடி சிரிக்கவோ, அவருடன் கைக்குலுக்கவோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
