பலியை மறைக்க மருத்துவர்களுக்கு அழுத்தம் - சீனாவால் அதிர்ச்சி!
உயிரிழப்புகளை மறைக்க சீனா மருத்துவர்களைக் கட்டாயப்படுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா பலி
சீனாவில் தொடர்ந்து, கொரோனா பலி எண்ணிக்கையை குறைவாக காட்ட, கொரோனா தொடர்பான பலிகளை மறைக்குமாறு மருத்துவர்களுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக, எதேச்சதிகாரத்துக்கு எதிரான குரல்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சுகாதார விதிமுறைகளையும், நடைமுறைகளையும் சீன அரசு மாற்றி அமைத்து இருப்பதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், கொரோனாவால் மருத்துவமனைக்கு வெளியே பலியாகும் எண்ணிக்கையை அதிகாரப்பூர்வமாக பதிவேற்றம் செய்வதையே சீனா நிறுத்திவிட்டதாகவும் அந்த தகவல் மேற்கோள்கோட்டியுள்ளது.
அதிர்ச்சி
சீனா, கடந்த டிசம்பர் மாதம் கொரோனாவுக்கு 60ஆயிரம் பேர் வரை பலியானதாக தகவல் கொடுத்தது. ஆனால், அதற்கு முன்பு வரை கொரோனா பேரிடர் தொடங்கியதிலிருந்து வெறும் ஐந்து ஆயிரத்திலேயே தக்க வைத்து கொண்டிருந்தது.
ஆனாலும், சீனா தற்போது தெரிவிக்கும் எண்ணிக்கையை விடவும், கொரோனா பலி எண்ணிக்கை கடுமையாகவும் அதிகமாகவும் இருக்கும் என்றே அந்த அமைப்பு தெரிவிக்கிறது.