காதலிக்க கற்றுத்தரும் கோர்ஸ் - கல்லூரிகளில் அறிமுகப்படுத்த அரசு உத்தரவு
கல்லூரிகளில் காதல் குறித்த பாடங்களை சேர்க்க சீன அரசு அறிவுறுத்தியுள்ளது.
சீன மக்கள் தொகை
உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இருந்த சீனா, மக்கள் தொகை விகிதத்தை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது.
அதற்கு பலனாக மக்கள் தொகை விகிதம் குறைந்து 2வது இடத்திற்கு சென்றது. ஆனால் சீன அரசு எதிர்பார்த்ததை விட பிறப்பு விகிதம் வெகுவாக குறைந்துள்ளது.
காதல் பாடம்
இதனையடுத்து மக்கள் தொகையை மீட்டெடுக்கும் திட்டத்தை சீன அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. புதிதாக திருமணமான பெண்களை தொலைபேசியில் அழைத்து எப்போது குழந்தை பெற்று கொள்வீர்கள் என கேட்குமளவிற்கு சீன அரசு இறங்கி வந்துள்ளது.
சீனாவில் உள்ள இளம் பருவத்தினர் மக்கள் தொகை வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பர். ஆனால் கல்லூரி மாணவர்களிடம் காதல், திருமணம், குழந்தை பெற்றுக்கொள்ளுதல் ஆகியவற்றில் பெரிய அளவில் ஈடுபாடு இல்லை. 57% மாணவர்கள் படிப்பிற்கிடையே, காதலுக்கு போதிய நேரம் ஒதுக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.
எனவே மாணவர்களுக்கு காதல், திருமணம், கலவி, குழந்தை பெற்றுக்கொள்ளுதல் குறித்த விழுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பாடதிட்டத்தை உருவாக்க கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு சீன அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.