திடீரென ரோபோ மக்களை தாக்க முயன்றதால் பரபரப்பு - வைரலாகும் வீடியோ

Viral Video China Artificial Intelligence
By Karthikraja Feb 25, 2025 04:30 PM GMT
Karthikraja

Karthikraja

in உலகம்
Report

பொது நிகழ்ச்சியில் ரோபோ மக்களை தாக்க முயன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரோபோ

ரோபோடிக் துறை மற்றும் ஏஐ தொழில்நுட்ப வளர்ச்சி பொதுமக்களின் அன்றாட வாழ்வில், பல்வேறு பயன்பாடுகளை எளிமைப்படுத்தினாலும், எதிர்காலத்தில் வேலை இழப்பை ஏற்படுத்தும் என்ற அச்சம் மக்களிடையே உள்ளது. 

china ai robot tries to attack participents

அதே போல் எதிர்காலத்தில் AI உதவியுடன் ரோபோ தன்னிச்சையாக முடிவெடுத்து செயல்படும் போது மனிதர்கள் மீது ரோபோக்கள் ஆதிக்கம் செலுத்தும் என்ற சந்தேகமும் மக்களிடையே உள்ளது. 

காதலுக்காகவே உருவாக்கப்பட்ட AI ரோபோ - இனி சிங்கிள்ஸ்களுக்கு கவலை இல்லை

காதலுக்காகவே உருவாக்கப்பட்ட AI ரோபோ - இனி சிங்கிள்ஸ்களுக்கு கவலை இல்லை

மக்கள் மீது தாக்குதல்

இந்நிலையில் அதற்கு முன்னோட்டமாக பொது நிகழ்வு ஒன்றில் ரோபோ ஒன்று மக்களை தாக்க முயன்ற சம்பவம் வைரலாகி வருகிறது. சீனாவில் AI உதவியுடன் இயங்கும் ரோபோக்களை வைத்து நடத்தப்பட்ட நிகழ்வு ஒன்றில், நிகழ்வில் கூடியிருந்தவர்களை நோக்கி சென்று தாக்க முயன்றது. உடனடியாக அருகே இருந்த பாதுகாவலர் அந்த ரோபோவை பின்னால் இழுத்துக்கொள்வார். 

இதில் நல்வாய்ப்பாக யாரும் காயமடையவில்லை. மென்பொருள் கோளாறு காரணமாக இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.