காதலுக்காகவே உருவாக்கப்பட்ட AI ரோபோ - இனி சிங்கிள்ஸ்களுக்கு கவலை இல்லை
காதலியையே போல் செயல்படும் AI ரோபோ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஏஐ காதலி
அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்று வரும் நுகர்வோர் எலெக்ட்ரானிக்ஸ் ஷோவில் (CES 2025) பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது புதுமையான கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்தி வருகின்றன.
அதே போல் அமெரிக்காவை சேர்ந்த ரியல்பாட்டிக்ஸ்(Realbotix) என்ற நிறுவனம் தங்களது ஆர்யா(Aria Robot) என்ற ஏஐ காதலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
முகபாவனைகள்
இந்த ரோபோவானது அச்சு அசலாக ஒரு பெண் போன்று இருக்குமாம். சூழலுக்கு ஏற்ப மனிதர்களை போன்ற முகபாவனைகளை வெளிப்படுத்த, ஒரு சமூகமாக ஒருங்கிணைந்து வாழும்போது எப்படி சூழல்களை கையாள வேண்டும் போன்றவை எல்லாம் இந்த ரோபோவிற்கு உள்ளீடு செய்யப்பட்டுள்ளது.
மனிதர்களைப் போலவே வாயசைத்து பேச, கண்களை அசைக்க பிரத்தியேகமாக அதன் தலை மற்றும் கழுத்து பகுதிகளில் மட்டும் 17 வகையான மோட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த ரோபோவை வாங்குபவர்கள் 5 வினாடிகளில், இதன் நிறம், முகம் மற்றும் சிகையலங்காரத்தை தங்களுக்கு பிடித்தது போல் மாற்றிக்கொள்ளலாம்.
விலை
இதன் விலை $175,000 (இந்திய மதிப்பில் ரூ.1.5 கோடி) ஆகும். இதில் தலை முதல் மார்பளவு வரை மட்டும் உள்ள ரோபோவின் விலை $10,000 (இந்திய மதிப்பில் ரூ.8.6 லட்சம்) ஆகும்.
How disturbing! pic.twitter.com/sW6Tvhnylz
— Visual feast (@visualfeastwang) January 10, 2025
இந்த ஆர்யா ரோபோவுடன் நடந்த கலந்துரையாடலில், எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம் உருவாக்கிய ஆப்டிமஸ் ரோபோவை சந்திக்க விரும்புவதாக தெரிவித்துள்ளது.
ஆர்யா ரோபோ குறித்து பேசிய Realbotix நிறுவனத்தின் ஆண்ட்ரூ கிகுவல் ஃ, "எங்கள் நிறுவனம் ரோபோக்களை மனிதர்களிடமிருந்து பிரித்தறிய முடியாததாக மாற்றும் என்று நம்புகிறது. மனிதர்களின் தனிமை துயரை இந்த ரோபோ நீக்கும். இது ரொமான்டிக் பார்ட்னராக, உங்கள் காதலன் அல்லது காதலி போல் செயல்படும்" என தெரிவித்துள்ளார்.