கட்டுப்பாடுகள் நீக்கம்; சீனாவை விட்டு வெளியேறும் 200 கோடி மக்கள் - சிக்கல்!
சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டுள்ளன.
கட்டுப்பாடு தளர்வு
சீனாவில் கொரோனா தாண்டவமாடி வருகிறது. இதனால் அங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. அதன்பின் மக்கள் போராட்டத்தில் இறங்கிய நிலையில், ஜி ஜின்பிங் அரசு கொரோனா கட்டுப்பாடுகளை நீக்கிவிட்டன. அதனைத் தொடர்ந்து கொரோனா பாதிப்பு உச்சம் தொட்டது.

இதனால் அங்குள்ள 140 கோடி மக்கள் இக்கட்டான சூழலில் உள்ளனர். அதையெல்லாம் தாண்டி சீன சந்திர புத்தாண்டில் முதல் 40 நாட்கள் சீன மக்கள் பல்வேறு இடங்களுக்குச் சென்று சுற்றிப் பார்ப்பார்கள். அதன்படி, சுமார் 200 கோடி பயணிகள், பயணங்களை மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்ப்பதாகச் சீன போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சிக்கல்
இது கடந்தாண்டை விட 99.5% அதிகமாகும். இதனால் வைரஸ் அதிகரிக்கவும் வாய்ப்பு அதிகம். இதனால் உலக நாடுகளும் கூட சீனாவில் இருந்து வருவோருக்குப் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. அங்குச் சீனாவில் உருவாக்கப்பட்ட சினோவாக் மற்றும் சினோபார்ம் வேக்சின் தான் அதிகம் பயன்படுத்தப்பட்டன.
மேற்கத்திய வேக்சின்களுடன் ஒப்பிடும்போது, இதன் தடுப்பாற்றல் ரொம்வே குறைவு. இதன் காரணமாகவே சீனாவில் இப்போது அதிகப்படியான தீவிர பாதிப்பு ஏற்படுவதாகவும் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.