பெற்றோரை கவனிக்காவிடில்..இனி பிள்ளைகளுக்கு சொத்துகள் கிடையாது

Tamil nadu Chennai
By Sumathi Oct 08, 2022 08:48 AM GMT
Report

பெற்றோரை கவனிக்காத பிள்ளைகளுக்கு சொத்துகள் கிடையாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சொத்துகள் கிடையாது

சென்னையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரி, தனது சொத்துக்களை மூத்த மகன் பெயருக்கு எழுதி வைத்திருந்தனர். ஆனால், வயதான காலத்தில் தங்களைக் கவனிக்காமலும், மருத்துவச் செலவுகளுக்கு உதவி செய்யாமலும் இருந்ததால்,

பெற்றோரை கவனிக்காவிடில்..இனி பிள்ளைகளுக்கு சொத்துகள் கிடையாது | Children Neglect Their Parents Have No Property

சொத்துக்கள் எழுதி வைத்ததை ரத்து செய்யக் கோரி வழக்கு தொடர்ந்தனர். வழக்கை கீழமை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை எதிர்த்துப் பெற்றோர் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கைச் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆஷா விசாரித்தார்.

உயர்நீதிமன்றம் தீர்ப்பு

நகைகளை விற்றும், சேமிப்புகளைக் கரைத்தும், தங்கள் மருத்துவச் செலவுகளை தாங்களே கவனிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளிய மகன்களின் செயல்பாடு, இதயமற்றது என விமர்சித்த நீதிபதி, கடந்த 2007ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நல பராமரிப்பு சட்டப்படி,

பெற்றோரை கவனிக்காவிடில்..இனி பிள்ளைகளுக்கு சொத்துகள் கிடையாது | Children Neglect Their Parents Have No Property

கவனிக்காத குழந்தைகளுக்குச் சொத்துக்கள் எழுதி வைத்ததை ரத்து செய்யப் பெற்றோருக்கு உரிமை உள்ளதாக உத்தரவிட்டுள்ளார்.