மருத்துவர்களின் அலட்சியம், அழுகிப்போன குழந்தையின் கை - அமைச்சர் விளக்கம்!

Chennai Ma. Subramanian
By Vinothini Jul 02, 2023 11:59 AM GMT
Report

அரசு மருத்துவர்களின் அலட்சியத்தால் குழந்தையின் கை அழுகியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குழந்தை

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் தஸ்தகீர், இவரது ஒன்றரை வயது மகன் முகமது மகிருக்கு, தலையில் நீர் வழிந்ததால் சிகிச்சைகாக, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சமீபத்தில் அனுமதித்துள்ளனர்.

child-hand-rotten-by-doctors-carelessness

அப்பொழுது குழந்தையின் வலது கையில் ‘ட்ரிப்ஸ்’ போட்டுள்ளனர். பின்னர் அறுவை சிகிச்சைக்கு மயக்க மருந்து கொடுத்தாகவும் கூறப்படுகிறது. ‘ட்ரீப்ஸ்’ போடப்பட்ட இடத்தில் கறுப்பாக மாறியுள்ளது. பின், வலதுகை முட்டி பகுதி வரை செயலிழந்ததுடன், கறுப்பாகவும் மாறியது. பரிசோதனை செய்த மருத்துவர்கள் வலதுகையை அகற்ற வேண்டும் என கூறி, எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு குழந்தையை அனுப்பி வைத்தனர்.

அமைச்சர் விளக்கம்

இந்நிலையில், செவிலியர்களின் அலட்சியத்தால், ஒன்றரை வயது குழந்தையின் கை அழுகியதாக புகார் எழுதுள்ளது. அதனால் சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், "மருத்துவர்களாக இருக்கட்டும் அல்லது செவிலியர்களாக இருக்கட்டும். அவர்கள் யாரும் பாதிப்பு ஏற்படுத்த மருத்துவமனைக்கு வருவதில்லை. பாதுகாக்கத்தான் வருகிறார்கள்.

child-hand-rotten-by-doctors-carelessness

நிச்சயம் உண்மைத்தன்மை அறிந்து நடவடிக்கை எடுக்கப்படும். சிகிச்சையின்போது கவனக்குறைவு இருந்துள்ளதா? என கண்டறிய விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது" என்று அவர் தெரிவித்தார்.