ராமநாதபுரம் தொகுதிகள்: வாக்கு எண்ணும் மையத்துக்கு அரசு அதிகாரிகள் வருகை
சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) எண்ணப்படுகிறது, தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார்? என்பது இன்று தெரிந்து விடும்.
தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதி களுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 6-ந் தேதி நடைபெற்றது. தமிழக மக்களின் இதயங்களில் குடிகொண்டிருந்த இரு பெரும் தலைவர்களான கருணாநிதி, ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் நடைபெற்ற முதல் சட்டமன்றத்தேர்தல் இது.
தமிழகத்தில் 6.26 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தாலும், 4.57 கோடி பேர் மட்டுமே வாக்களித்தனர். அவர்களில், ஆண்கள் 2.26 கோடி பேரும், பெண்கள் 2.31 கோடி பேரும் வாக்குகளை செலுத்தினர். வாக்குப்பதிவுக்காக 88 ஆயிரத்து 937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன .
அரசு அதிகாரிகள் வருகை
ராமநாதபுரத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் காலை 8 மணிக்கு தொடங்க உள்ளதை அடுத்து அரசு அதிகாரிகள், முகவர்கள், பத்திரிக்கையாளர்கள் வாக்கு எண்ணும் மையத்திற்கு வருகை தந்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பரமக்குடி, முதுகுளத்தூர், திருவாடானை, ராமநாதபுரம் உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கை ராமநாதபுரத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் காலை 8 மணிக்கு தொடங்கஉள்ளதை அடுத்து அரசுஅதிகாரிகள், முகவர்கள், பத்திரிக்கையாளர்கள் வாக்கு எண்ணும் மையத்திற்கு வருகை தந்துள்ளனர்.