வாழ்நாள் முழுவதும் இலவச பயணம் - பேருந்து நிலையத்தில் பிறந்த குழந்தைக்கு அடித்த ஜாக்பாட்

Telangana
By Karthikraja Jun 20, 2024 11:30 AM GMT
Report

பேருந்து நிலையத்தில் பிறந்த குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் இலவச பயணம் மேற்கொள்ளலாம் என மாநில போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

தெலுங்கானா

தெலுங்கானா மாநிலத்தில், கடந்த ஜூன் 16 ம் தேதி அன்று கர்ப்பிணி பெண் குமாரி தனது கணவருடன் பத்ராசலம் செல்வதற்காக கரீம் நகர் பேருந்து நிலையத்துக்கு வந்துள்ளார். அப்போது குமாரிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. 

karimnagar bus stand

இதையடுத்து அங்கு பணியில் இருந்த போக்குவரத்து ஊழியர்கள் ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் வருவதற்குள் பிரசவ வலி அதிகரிக்கவே, போக்குவரத்துக்கழக பெண் ஊழியர்கள் பேருந்து நிலையத்திலேயே குமாரிக்கு பிரசவம் பார்த்தனர்.  

சென்னை பேருந்தில் ஜூன் 21 முதல் கட்டணமில்லா பயணம் - யாருக்கெல்லாம் தெரியுமா?

சென்னை பேருந்தில் ஜூன் 21 முதல் கட்டணமில்லா பயணம் - யாருக்கெல்லாம் தெரியுமா?

பெண் குழந்தை

அப்போது குமாரிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. பின்னர் தாயும் குழந்தையும் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு இருவரும் ஆரோக்கியமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

இந்நிலையில் கரீம்நகர் பேருந்து நிலையத்தில் பிறந்த பெண் குழந்தை, தன் வாழ்நாள் முழுவதும் மாநில அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் மேற்கொள்வதற்கான சிறப்புப் பயண அனுமதிச்சீட்டு வழங்கப்படுவதாக தெலங்கானா மாநில சாலை போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. 

[karim nagar bus stand free bus pass baby]

மேலும், சரியான நேரத்தில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு உதவிய போக்குவரத்து பெண் ஊழியர்களின் செயலுக்கு போக்குவரத்து துறை பாராட்டுகளைத் தெரிவித்துள்ளது.