தாய்ப்பால் குடித்ததில் இறந்த குழந்தை - மகனுடன், தாய் குற்ற உணர்வில் தற்கொலை!

Kerala Death
By Sumathi 2 வாரங்கள் முன்
Report

தாய்ப்பால் கொடுக்கும்போது குழந்தை மூச்சி திணறி இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தை இறப்பு

கேரளா, உப்புத்துறை பகுதியைச் சேர்ந்தவர் லீசா. கூட்டுறவு வங்கியில் பணிபுரிந்து வரும் இவருக்கு 7 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில், மீண்டும் கருவுற்ற லீசாவுக்கு கடந்த 28 நாட்களுக்கு முன்பு ஒரு குழந்தை பிறந்தது.

தாய்ப்பால் குடித்ததில் இறந்த குழந்தை - மகனுடன், தாய் குற்ற உணர்வில் தற்கொலை! | Child Died While Breastfeeding In Kerala

தனது குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டிக் கொண்டிருந்தபோது பால் தொண்டையில் சிக்கி மூச்சுத் திணறி குழந்தை உயிரிழந்தது. இதனால் மணமுடைந்த லீசா தாய்ப்பால் கொடுக்காமல் இருந்திருந்தால் குழந்தை இறந்திருக்காது என குற்ற உணர்வில் இருந்துள்ளார்.

 தாய் தற்கொலை

இந்நிலையில், தனது மூத்த மகனுடன் தனது வீட்டிற்கு அருகில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். தொடர்ந்து, தீயணைப்புத் துறையினர் உடல்களை மீட்டு

பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். தொடர்ந்து இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.