மாப்பிள்ளை தாய்ப்பால் குடிப்பதை பார்த்து ஷாக்கான மணமகள் - கடைசியில் எடுத்த முடிவு!
திருமணம் ஒன்றில் நடந்த நிகழ்வு ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிர்ச்சி நிகழ்வு
பிரிட்டனைச் சேர்ந்தவர் ஜார்ஜ் மிட்சல். திருமண விழாக்களை ஏற்பாடு செய்து அதை நடத்தி தருகிறார். இவரிடம் மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டாக வேலை பார்ப்பவர் ஜென்னி. அப்போது ஒரு திருமணத்தில் மணமகனுக்கு மேக்கப் போட சென்றுள்ளார். அப்போது ஒரு அறைக்குள் நுழைந்துள்ளார்.

அங்கே, மணமகன் தன்னுடைய தாயிடம் தாய்பால் குடித்துக்கொண்டிருந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்து மணமகளிடம் இதுகுறித்து கூறியுள்ளார். ஜார்ஜ் இதை கூறியதும் அதை கேட்ட நிகழ்ச்சியின் ஹோஸ்ட்டும் இது உண்மைதானா? என ஆச்சரியத்துடன் கேட்டுள்ளார்.
மணப்பெண் முடிவு
சின்ன குழந்தையாக இருந்தபோது ஆரம்பித்த பழக்கம், இப்போதுவரை மாப்பிள்ளையால் நிறுத்த முடியவில்லையாம். ஆனால், இதனை நேரடியாக பார்த்த மணப்பெண் எந்தவித சர்ச்சையையும் எழுப்பவில்லை.
மணமகனை எந்த கேள்வியும் கேட்கவில்லை. திட்டமிட்டபடியே திருமணம் நடந்துள்ளது. இந்த சம்பவத்தை ஜார்ஜ் தற்போது பகிர்ந்துள்ளார். அவர்கள் யார் என்ற அடையாளத்தை வெளியிடவில்லை.