ஏன் நடிக்கமாட்டாரு..! சினிமாவிலிருந்து விலகும் விஜய் - கெஞ்சும் பிஞ்சு குழந்தை..! வைரல் வீடியோ..!

Vijay
By Karthick Feb 03, 2024 10:01 AM GMT
Report

இன்னும் ஓரு படத்துடன் தான் சினிமாவில் இருந்து விலகுவதாக நடிகர் விஜய் அறிவித்துள்ளது அவரது ரசிகர்களுக்கு அதிருப்தியை கொடுத்துள்ளது.

விஜய்

தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் கட்சி துவங்கியுள்ள தனது அரசியல் வருகையை எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அறிவித்து விஜய் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

child-about-vijay-leaving-cinema-viral-video

தற்போது G.O.A.T படத்தில் நடித்து வரும் அவர், அதனை தொடர்ந்து மேலும் ஒரு படம் மட்டுமே தான் நடிப்பேன் என்றும் அதன் பிறகு முழுவதுமாக அரசியலில் ஈடுபடப்போவதாகவும் அறிவித்துள்ளார்.

வாகை சூடு விஜய்..! அரசியல் கட்சி தொடங்கிய மகன் - உருக்கமாக பேசிய தாய் ஷோபா!

வாகை சூடு விஜய்..! அரசியல் கட்சி தொடங்கிய மகன் - உருக்கமாக பேசிய தாய் ஷோபா!

இது அவரது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.இது குறித்து பலரும் கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில், சுட்டி குழந்தை ஒருவரின் வீடியோ ஒன்று சமூகவலைத்தளத்தை ஆக்ரமித்துள்ளது.


அந்த வீடியோவில், இனி விஜய் படங்களில் நடிக்க மாட்டார் என அந்த குழந்தையுடன் கூற, அந்த சிறுவன் ஏன் இனி நடிக்க மாட்டாரு..? என வெகுளித்தனமாக கேட்கிறார்.