நிதி வசூலிக்க கூடாது மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் அதிரடி உத்தரவு..!

Governor of Tamil Nadu
By Thahir Jun 09, 2022 07:03 AM GMT
Report

பள்ளிகளை துாய்மைப்படுத்த நிதி வசூலிக்க கூடாது என மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.

பள்ளிகள் திறப்பு

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ,மாணவிகளுக்கு வருகிற 13-ந் தேதி திங்கட்கிழமை முதல் திறக்கப்பட உள்ளது.

நிதி வசூலிக்க கூடாது மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் அதிரடி உத்தரவு..! | Chief Secretary Order To District Collectors

பள்ளிகளை விரைவில் திறக்கப்பட உள்ளதை அடுத்து முன்னேற்பாடு பணிகள் வெகு விரைவாக நடைபெற்று வருகிறது.

இறையன்பு உத்தரவு

வரும் 13ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி, மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் இறையன்பு முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

நிதி வசூலிக்க கூடாது மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் அதிரடி உத்தரவு..! | Chief Secretary Order To District Collectors

இது குறித்து தலைமை செயலாளர் இறையன்பு அனுப்பியுள்ள கடிதத்தில், 2 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளிகள் திறப்பதால் தீவிரமாக தூய்மை பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

பள்ளிகளில் தூய்மை இயக்கத்தை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடைப்பிடிக்க வேண்டும். பள்ளிகளை தூய்மைப்படுத்த பெற்றோர் ஆசிரியர் கழகத்தினரிடம் தலைமை ஆசிரியர்கள் நிதி வசூலிக்க கூடாது.

பள்ளிகளை புதுப்பொலிவுடன் சீரமைத்து வகுப்புகளை நடத்த வேண்டும் என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.