மற்றவர்கள் மீது பழிபோடும் முதல்வர் விஜய்... கடும் விமர்சனத்தை வைத்த கனிமொழி

Smt M. K. Kanimozhi Tamil nadu
By Manchu Jun 03, 2026 05:49 PM GMT
Report

தமிழக முதல்வர் என்ன நடந்தாலும் யார் மீது பழி போடலாம் என்று தேடிக்கொண்டிருப்பதாக கனிமொழி எம்.பி கடுமையாக விமர்சித்து வருகின்றார்.

முதல்வர் விஜய்

தவெக கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய் தற்போது முதல்வராக இருந்து வருகின்றார். 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு பெரும்பான்மையை நிரூபித்தது.

ஆனால் பதவி அமைப்பதற்கு இன்னும் சில இடங்கள் தேவைப்பட்டதால் திமுக கூட்டணியில் இருந்த சில கட்சிகளை தன்னிடம் சேர்த்துக்கொண்டு பதவி அமைத்துள்ளது.

பிரபல நடிகையின் தந்தைக்கு அரிவாள் வெட்டு... காரணம் என்ன?

பிரபல நடிகையின் தந்தைக்கு அரிவாள் வெட்டு... காரணம் என்ன?

பதவியேற்ற நாளிலிருந்து எதிர்கட்சி தலைவராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் திருச்சி கிழக்கு தொகுதியில் சமீபத்தில் முதல்வர் பேசினார்.

அப்பொழுது தற்குறி, ரீல்ஸ் கூட்டம் என பேசிய பல விடயங்களுக்கு தனது பாணியில் முதல்வர் விஜய் பதிலளித்தார். ஆனால் முதல்வராக பதவியில் இருக்கும் விஜய்யின் இந்த மாற்றத்தினை கண்டு பலரும் அதிருப்தியில் இருக்கின்றனர்.

மற்றவர்கள் மீது பழிபோடும் முதல்வர் விஜய்... கடும் விமர்சனத்தை வைத்த கனிமொழி | Chief Minister Vijay Someone To Blame Kanimozhi

கனிமொழி ஆவேசம்

திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் பேசியதைக் குறித்து கனிமொழி கூறுகையில், தான் ஆட்சியில் இருப்பது தெரியாமல் தற்போதைய பிரச்சனைக்கு முந்தைய ஆட்சியை குறைகூறி பேசுகின்றார் முதல்வர் விஜய்.

குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகமாக நடந்து கொண்டிருக்கின்றது. ஆனால் முதல்வர் விஜய் நீங்கள் எடுத்துவரும் பொருளுக்கு நிர்வாகம் பொறுப்பல்ல என்று கடையில் எழுதப்பட்டிருக்கும் பலகையைக் போன்று தவெக கட்சி இருப்பதாக விமர்சித்துள்ளார்.

அதாவது நடக்கும் தவறுக்கு மற்றவர்கள் மீது பழி போடுவதாக கூறியுள்ளார்.

மற்றவர்கள் மீது பழிபோடும் முதல்வர் விஜய்... கடும் விமர்சனத்தை வைத்த கனிமொழி | Chief Minister Vijay Someone To Blame Kanimozhi