பிரபல நடிகையின் தந்தைக்கு அரிவாள் வெட்டு... காரணம் என்ன?
பிரபல நடிகை தீபாவின் தந்தைக்கு அரிவாளால் வெட்டப்பட்ட குற்றவாளியை போலிசார் கைது செய்துள்ளனர்.
நடிகை தீபா
தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகையாகவும், சீரியலில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகை தான் தீபா. இவரது தந்தை புலவர் கணேசன் தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியைச் சேர்ந்தவர்.
வயது 70 ஆகும் நிலையில், டீக்கடை ஒன்றில் நின்று கொண்டிருந்த தருணத்தில் மர்ம நபர்கள், தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து கணேசனை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதில் அவரது தலை மற்றும் உடல் பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், கணேசனைக் காப்பாற்ற அருகில் இருந்தவர்கள் தடுக்க முயன்றுள்ளனர்.

ஆனால் தடுக்க வந்த நபரின் கையிலும் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. இதனையடுத்து குறித்த குற்றவாளிகள் அங்கிருந்து எஸ்கேப் ஆகிய நிலையில், தீபாவின் தந்தையை மீட்டு அக்கம் பக்கத்தினர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
அங்கு அவருக்கு சிசிக்கை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த கொலை முயற்சி முன்விரோதம் காரணமாக நடந்திருக்கலாம் என்று கூறப்படுகின்றது.

குற்றவாளிகளை தீவிரமாக போலிசார் தேடி வந்த நிலையில், முத்துராஜ், கார்த்தி, இசக்கி அகிய 3 பேரை போலிசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து போலிசார் தீவிரமாக விசாரணையும் மேற்கொண்டும் வருகின்றனர்.
பிரபல துணை நடிகை தீபாவின் தந்தைக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! விரட்டி விரட்டி வெட்டிய கும்பல் Manithan