கோடிகளில் சம்பளம் வாங்கிய முதல்வர் விஜய்க்கு தற்போதைய சம்பளம் எவ்வளவு?

Vijay Tamil nadu Chief Minister of Tamil Nadu C Joseph Vijay
By Manchu May 21, 2026 12:00 PM GMT
Report

தமிழக முதல்வர் விஜய்மற்றும் மாநில சட்டப்பேரவையில் தேர்ந்தெடுக்கப்படும் பிற அமைச்சர்கள், எம்எல்ஏ இவர்களின் சம்பள விபரத்தை தெரிந்து கொள்ளலாம்.

முதலமைச்சர் விஜய்

தமிழக சட்டமன்ற தேர்தலில் தவெக கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றிபெற்று, சில கட்சியினை கூட்டணியாக சேர்த்து தற்போது முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுள்ளார்.

இதுவரை விஜய் நடிகராக நூற்றுக்கணக்கான கோடிகளில் தான் சம்பளம் பெற்றிருந்தார். ஆனால் தற்போது இவரது சம்பளம் லட்சங்களில் மாறியுள்ளது.

கோவில் படிபாதையில் மனைவி தூக்கி சென்று ரீல்ஸ்... சர்ச்சையை ஏற்படுத்திய சம்பவம்

கோவில் படிபாதையில் மனைவி தூக்கி சென்று ரீல்ஸ்... சர்ச்சையை ஏற்படுத்திய சம்பவம்

அதாவது இந்திய அரசியலமைப்பு 106-வது சட்டப்பிரிவின் கீழ், நாடாளுமன்றத்தில் தெரிந்தெடுக்கப்படும் எம்.பி.க்களின் ஊதியம், படிகள் மற்றும் பிற சலுகைகள், ஓய்வூதியம் என வழங்கப்படுகின்றது.

இதே போன்று மாநில சட்டப்பேரவை தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களுக்கு அரசு நிதியிலிருந்து ஊதியம் மற்றும் பிற சலுகைகள் வழங்கப்படுகின்றது.

கோடிகளில் சம்பளம் வாங்கிய முதல்வர் விஜய்க்கு தற்போதைய சம்பளம் எவ்வளவு? | Chief Minister Vijay Salary Details

சம்பளம் எவ்வளவு?

தமிழ்நாட்டில் எம்.எல்.ஏக்களின் ஊதியம் ரூ.25 ஆயிரமாக இருந்த நிலையில், 2008ம் ஆண்டு 30 ஆகவும், 2009ம் ஆண்டு 50 ஆகவும், 2011ம் ஆண்டு 55 ஆயிரமாகவும், 2017ம் ஆண்டு 1,05,000 ஆக மாற்றப்பட்டுள்ளது.

ஆன்மீகத்தில் இறங்கிய ரவி மோகன்... அதிரடி முடிவிற்கு காரணம் என்ன?

ஆன்மீகத்தில் இறங்கிய ரவி மோகன்... அதிரடி முடிவிற்கு காரணம் என்ன?

2024ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, முதல்வர், அமைச்சர், சட்டப்பேரவை தலைவர் என அனைத்து உறுப்பினர்களுக்கும் அடிப்படை சம்பளமாக 30 ஆயிரமும், மாதாந்திர படி, தொலைபேசி படி என சில சலுகைகளுடன் குறைந்த பட்சம் 1,05,000 நிர்ணயிக்கப்பட்டது.

கோடிகளில் சம்பளம் வாங்கிய முதல்வர் விஜய்க்கு தற்போதைய சம்பளம் எவ்வளவு? | Chief Minister Vijay Salary Details

அதுமட்டுமின்றி வாடகை கட்டிடத்தில் எம்.எல்.ஏ அலுவலகம் இயங்கினால் அதற்கான வாடகை, உதவியாளர் ஒருவருக்கான சம்பளம், ரயில் மற்றும் விமானத்தில் இலவச பயணம் செய்யும் சலுகை உள்ளது. சட்டப்பேரவை கூட்டம் அல்லது துறை சார்ந்த கூட்டத்தில் பங்குபெற்றால் அதற்கு தனியாக நாள் ஒன்றிற்கு 2,500 வழங்கப்படுமாம்.

இந்நிலையில் தற்போது தமிழ்நாடு சட்டப்பேரவை விதியின்படி முதல்வர் ஜோசப் விஜய்க்கு மாத சம்பளமாக ரூ.2,05,000 மட்டும் வழங்கப்படும் என்று கூறப்படுகின்றது. இதில் மாதப்படி, தொகுதிபடி, தபால் படி, தொலைப்பேசி கட்டணம், வாகனபடி இவைகள் அடங்குமாம்.

கோடிகளில் சம்பளம் வாங்கிய முதல்வர் விஜய்க்கு தற்போதைய சம்பளம் எவ்வளவு? | Chief Minister Vijay Salary Details

மேலும் குடும்பத்தினருக்கு முழு மருத்துவக் காப்பீடு, தனி பங்களா, கார்கள், முதல்வரின் வீடு, அலுவலகத்தில் பணியாற்றும் உதவியாளருக்கு சம்பளம் அரசு ஏற்றுக்கொள்கின்றது.

அதுமட்டுமின்றி தனி விமானம், ஹெலிகாப்டர் பயணம் மேற்கொண்டாலும் அதற்கான கட்டணத்தை அரசு கொடுக்குமாம். மத்திய அரசு சார்பில் Z Plus பாதுகாப்பு 24 மணி நேரமும் வழங்கப்படுகின்றது.