கோவில் படிபாதையில் மனைவி தூக்கி சென்று ரீல்ஸ்... சர்ச்சையை ஏற்படுத்திய சம்பவம்
வாலிபர் ஒருவர் தனது மனைவியை பழனி கோவில் படிப்பாதையில் தூக்கி சென்று ரீல்ஸ் எடுத்துள்ளது பரபரப்பாக பேசப்படுகின்றது.
கோவிலில் தம்பதிகளின் ரீல்ஸ்
பொதுவாக பக்தர்கள் வழிபடும் இடங்களில் வீடியோ எடுத்து ரீல்ஸ் எடுக்கக்கூடாது என தமிழகத்தில் பல கட்டுப்பாடுகள் இருந்தாலும், மக்கள் அதனை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.
இங்கு தம்பதியர் ஒருவர் எடுத்துள்ள ரீல்ஸ் வைரலாகி வருகின்றது. அறுபடை வீடுகளில் 3ம்படை வீடாக இருக்கும் பழனி தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்வதற்கு பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் வந்துள்ளனர்.

அடிவாரத்திலிருந்து மலையில் இருக்கும் கோவிலுக்கு செல்வதற்கு வின்ஞ்ச் மற்றும் ரோப் கார் வசதி காணப்பட்டாலும், பக்தர்கள் பெரும்பாலும் நடைபாதையாக வருவதாக வேண்டி அதன்படி நேர்த்திகடனையும் செய்கின்றனர்.
இந்நிலையில் தனது மனைவியை படிப்பாதையில் கையில் தூக்கிக்கொண்டு கணவர் வேலை வரும் காணொளி வருகின்றது. மேலும் இதன் பின்னணியில் கையில் மிதக்கும் கனவா நீ என்ற சினிமா பாடலும் ஒலிக்கின்றது.
பக்தர்கள் அவதானித்தாலும் குறித்த ஜோடி எதையும் கண்டுகொள்ளாமல் தனது வேலையை செய்துள்ளனர். தற்போது கோவில் நிர்வாகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த நபர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டும் குறித்த தம்பதிகள் இவ்வாறு செய்துள்ளது மக்களை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.
சுகன்யா என்ற பெயரில் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிடப்பட்ட இக்காட்சியினை எடுத்தது யார் என்று விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.