ஜி20 ஆலோசனை கூட்டம் - முதலமைச்சர் டெல்லி பயணம்!

M K Stalin Narendra Modi Delhi
By Sumathi Dec 05, 2022 03:58 AM GMT
Report

ஜி-20 ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி செல்கிறார்.

ஜி-20 ஆலோசனை 

இந்தோனேசியாவில் பாலி தீவில் நடைபெற்ற ஜி 20 நாடுகளின் மாநாட்டில் அந்த அமைப்பின் தலைவராக பிரதமர் மோடி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதன்படி, அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் டெல்லியில் ஜி -20 நாடுகளின் மாநாடு பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ளது.

ஜி20 ஆலோசனை கூட்டம் - முதலமைச்சர் டெல்லி பயணம்! | Chief Minister Stalin Will Visit Delhi G20 Summit

இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்காக மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்காக அனைத்துக் கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டத்துக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.

 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

32 பிரிவுகளில் நாடு முழுவதும் சுமார் 200 கூட்டங்கள் நடத்தப்பட உள்ளது. அதன் அடிப்படையில், பெரும்பாலான கட்சி தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இதில் கலந்துக் கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி செல்கிறார். மாலை நடக்கும் கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் இரவு சென்னை திரும்புகிறார்.