நாம் இருவர் நமக்கு எதுக்கு மற்றொருவர் : திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
இந்து சமய அறநிலைத்துறை சார்பில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் 31 ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்தார். அங்கு திருமணம் செய்து வைத்த ஜோடிகளுக்கு தாலியுடன் 30 சீர்வரிசை பொருட்களை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.
31 ஜோடிகளுக்கு திருமணம்
அப்போது பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்: மக்கள் பணியே மகேசன பணி என செயலாற்றி வருகிறோம், கோவில் என்பது மக்களுக்காகத்தான் கோவில் யாருடைய தனிப்பட்ட சொத்து கிடையாது. அரசிட்யல் செய்ய எதுவும் கிடைக்காததால் சிலர் மதத்தை வைத்து அரசியல் செய்கின்றனர், ஆதாராம் இல்லாமல் குற்றம் சாட்டி வருகின்றனர்.
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு கோயில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. அனைவருக்குமான அரசாக திமுக அரசு செயலபட்டு வருகின்றது. அனைவருக்குமான அரசாக திமுக அரசு செயல்பட்டுவருவதாக முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
நமக்கு எதுக்கு மற்றொருவர்
மேலும், தமிழக அரசும் குடும்ப கட்டுப்பாட்டு திட்டத்திற்கு பெருமளவு செலவு செய்து வருகிறது. முன்பெல்லாம் நாம் இருவர் நமக்கு மூவர் என்று சொன்னோம். அது பின்னர் நாம் இருவர் நமக்கு இருவர் என்றும், நாம் இருவர் நமக்கு ஒருவர் என்றும் மாறியது. தற்போது நாம் இருவர் நமக்கு எதுக்கு மற்றொருவர் என கூறப்படுகிறது. இவ்வாறு முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.