வேகமாக குணமடைந்து வருகிறார் முதலமைச்சர் : காவேரி மருத்துவமனை அறிக்கை
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக சென்னை காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் வீட்டிலேயே 2 நாட்களாக தன்னை தனிமைப்படுத்தி கொண்டிருந்தார்.
முதலமைச்சருக்கு கொரோனா
இந்த சூழலில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் ஸ்டாலின் முதல்வருக்கு மருத்துவ பரிசோதனை , கண்காணிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சரிடம் பிரதமர் மோடி தொலை பேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்தார்,காவேரி மருத்துவனையில் முதலமைச்சரின் சிகிச்சை பற்றியும் பிரதமர் மோடி கேட்டறிந்தர்
வீடுதிரும்ப வாய்ப்பு
இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இ.என்.டி சிகிச்சை மேற்கொண்டு வரும் மூத்த மருத்துவர் மோகன் காமேஷ்வரன், காவேரி மருத்துவமனைக்கு வருகைபுரிந்துள்ளனர்.

முதலமைச்சரின் உடல்நிலை தொடர்பான மருத்துவ அறிக்கை இன்று மதியம் வழங்கப்படும் என மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளதாக கூறப்பட்ட நிலையில்இந்நிலையில் இன்று வெளியிட்ட அறிக்கையில் 'முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நிலை சீராக உள்ளது.
உடல் நிலை சீராக உள்ளது
உடல்நிலையில் முன்னேற்றம் உள்ளது. தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேகமாக குணமடைந்து வருகிறார். முதல்வர் ஸ்டாலினுக்கு கொரோனா தொற்றில் இருந்து விடுபடுவதற்கான சிகிச்சைகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது.

ஓரிரு நாட்கள் மருத்துவமனையில் தங்கி ஓய்வில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது' என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan