நாடாளுமன்றத்தில் கர்ஜிக்கும் மொழி..என்னுடைய தங்கை கனிமொழி - மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
திமுக எம்.பி கனிமொழி நாடாளுமன்றத்தில் கர்ஜிக்கும் மொழியாகச் செயல்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
திமுக
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மகளிரணி சார்பில் ‘கலைஞர் 100 – வினாடி-வினா’ போட்டி பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், துணை பொதுச் செயலாளர் கனிமொழி , துரைமுருகன் , திமுக அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக அரசியல் களத்தில் மறுமலர்ச்சிக்கான சட்டங்களையும், திட்டங்களையும் உருவாக்கி – தமிழ்ச் சமுதாயத்திற்கான விடியலாகவும் - முன்னேற்றத்திற்கான விடையாகவும் இருந்தவர் கலைஞர் கருணாநிதி என்று கூறினார்.
எம்.பி கனிமொழி
தொடர்ந்த பேசிய அவர் எங்கே திராவிடப் பட்டாளம்? என்று கேள்வி கேட்பவர்களுக்குக் கலைஞர் நூற்றாண்டில் வினாடி-வினா போட்டி நடத்தி, என்னுடைய அருமைத் தங்கை கனிமொழி அடையாளம் காட்டியிருப்பதாகக் கூறினார்.
மேலும் பாசத்தைப் பொழியும்போது கனிமொழியாகவும் தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்ட நாடாளுமன்றத்தில் பேசும்போது கர்ஜனை மொழியாகத் தனது தந்தை இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார்.