விமானம் வேண்டாம்.. தென்காசிக்கு ரயிலில் சென்ற முதலமைச்சர் - பின்னணி!

M K Stalin Tamil nadu
By Sumathi Dec 08, 2022 04:32 AM GMT
Report

தென்காசிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல்முறையாக ரயில் பயணம் மேற்கொண்டார்.

 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை எழும்பூரில் இருந்து பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் தென்காசி ரயில் நிலையம் வந்தடைந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அதன் பிறகு லத்திட்ட உதவி வழங்கும் விழா நடக்க உள்ள இடத்திற்கு புறப்படுகிறார்.

விமானம் வேண்டாம்.. தென்காசிக்கு ரயிலில் சென்ற முதலமைச்சர் - பின்னணி! | Chief Minister Mk Stalin Going To Tenkasi By Train

அங்கு, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய பிறகு முடிவு பெற்றுள்ள பல்வேறு பணிகளையு தொடங்கி வைத்து மேலும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இந்த விழாவில் சுமார் 1 லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ரயில் பயணம்

இதை தொடர்ந்து கடையநல்லூர் வழியாக விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்திற்கு புறப்பட்டு செல்கிறார். இதற்கிடையே தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி மாவட்ட நிர்வாகம் சார்பில் அரசு நலத்திட்ட உதவி வழங்க கலெக்டர் ஆகாஷ் மேற்பார்வையில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக முதலமைச்சர் பயணத்திற்காக பொதிகை ரயிலில் சொகுசு பெட்டி இணைக்கப்பட்டது. இந்த பெட்டியில் சொகுசு ஓட்டலில் உள்ளதை போல் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டிருந்தது. உயர் பதவியில் உள்ளவர்கள் விமானம் மூலம் செல்ல முடியாத இடங்களுக்கு செல்வதற்காக ‘சலூன்’ என்ற சொகுசு வசதிகள் கொண்ட தனிப்பெட்டியை உருவாக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.