மீனவர் மீது துப்பாக்கிச் சூடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு

M K Stalin Government of Tamil Nadu
By Thahir Oct 21, 2022 12:57 PM GMT
Report

தமிழக மீனவர் மீது இந்திய கடற்படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மீனவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

மீனவருக்கு நிவாரணம் அறிவிப்பு 

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், மயிலாடுதுறை மாவட்டம், வானகிரி கிராமத்தைச் சேர்ந்த மீனவர் வீரவேல் என்பவர் இன்று காலை இந்திய கடற்படையினரால் சுடப்பட்டதில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது என்ற செய்தியை அறிந்து, மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

சம்பவத்தில் காயமடைந்த வீரவேல், சிகிச்சைக்காக உடனடியாக இராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மீனவர் மீது துப்பாக்கிச் சூடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு | Cm M K Stalin Relief For Firing On Fisherman

சிகிச்சை பெற்று வரும் மீனவர் வீரவேலுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளதோடு, அவருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.