முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் - முக்கிய முடிவுகள் குறித்து ஆலோசனை!
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
அமைச்சரவை கூட்டம்
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில், அதுதொடர்பாக அவசர சட்டம் இயற்றுவது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் தமிழக அரசிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ள நிலையில்,
ஆன்லைன் ரம்மி தடை?
அடுத்தகட்ட நடவடிக்கை குறித்தும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. பரந்தூர் விமான நிலையத்துக்காக நிலத்தை கையகப்படுத்துவதில் உள்ள பிரச்னை தொடர்பாக எத்தகைய நிலைப்பாட்டை எடுக்கலாம் என்பது குறித்தும்,
வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க இருப்பதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து மக்களை பாதுகாப்பது பற்றியும், வெள்ளத்தடுப்பு, மழைநீர் வடிகால் மற்றும் பாதாள சாக்கடை பணிகளை துரிதப்படுத்துவது சம்பந்தமாகவும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் உயர்கல்வியின் தரத்தை மேம்படுத்துதல், மாநில கல்விக் கொள்கை உள்ளிட்டவை பற்றியும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.