குடியரசு துணைத் தலைவருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

M K Stalin Delhi NEET
By Sumathi Aug 17, 2022 06:35 AM GMT
Report

குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரை சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

மு.க.ஸ்டாலின் 

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து நேற்று இரவு ஒருநாள் பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி புறப்பட்டார். மேலும் முதலமைச்சருடன் தனி செயலாளர் உதயசந்திரன், உதவியாளர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் சென்றுள்ளனர்.

குடியரசு துணைத் தலைவருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு | Chief Minister M K Stalins Meets Vice President

அதனைத் தொடர்ந்து, இன்று காலை 10:30 மணி அளவில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரை அவரது இல்லத்தில் சந்தித்து மு.க. ஸ்டாலின் வாழ்த்து கூறினார். குடியரசு துணை தலைவரை சந்தித்து ஹோம் ஆப் செஸ் என்ற புத்தகத்தையும் அவருக்கு பரிசாக வழங்கினார்.

பிரதமருடன் சந்திப்பு

மாலை 4.30 மணிக்கு பிரதமர் மோடியைச் சந்தித்து செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில் பங்கேற்றதற்கு நன்றி தெரிவிக்க இருக்கும் மு.க.ஸ்டாலின், நீட் விலக்கு மசோதா, ஜிஎஸ்டி நிதி நிலுவைத் தொகை உள்லிட்டவை குறித்தும் புதிய திட்டங்கள் குறித்தும் வலியுறுத்த உள்ளதாகக் கூறப்படுகிறது. பின்பு இரவு 8.30 மணிக்கு சென்னை திரும்புகிறார்.