ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்து - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்பு
ஆளுநர் தேநீர் விருந்து
சுதந்திர தின, குடியரசு தினம், புத்தாண்டு உள்ளிட்ட முக்கிய நாட்களில் ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து அளிப்பது வழக்கம்.
அந்த வகையில் இன்று 75-வது சுதந்திர தின விழாவையொட்டி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தேநீர் விருந்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் திரை பிரபலங்களுக்கு நேற்று அழைப்பு விடுத்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்பு
இந்நிலையில், இன்று 75-வது சுதந்திர தின விழாவையொட்டி, சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், தமிழக ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். மேலும், இவ்விருந்தில் ஓ.பன்னீர்செல்வம், ஜி.கே.வாசன், கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோரும் கலந்து கொண்டுள்ளனர்.