தாங்கமுடியாத துயரம் - பிரியாவின் குடும்பத்திற்கு முதலமைச்சர் நேரில் ஆறுதல்

M K Stalin Tamil nadu
By Sumathi Nov 17, 2022 08:27 AM GMT
Report

மாணவி பிரியாவின் குடும்பத்தை முதலமைச்சர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார்.

பிரியா மரணம்

சென்னை அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் காலை இழந்த கால்பந்து வீராங்கனை பிரியா சிகிச்சை பலனின்றி நேற்று முன் தினம் உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியதை, மாணவி பிரியாவுக்கு சிகிச்சை அளித்த 2 மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

தாங்கமுடியாத துயரம் - பிரியாவின் குடும்பத்திற்கு முதலமைச்சர் நேரில் ஆறுதல் | Chief Minister M K Stalin Visit Student Priya Home

மேலும் உடனடியாக அரசு தரப்பில் மரணம் அடைந்த கால்பந்து வீராங்கனை பிரியாவின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், உயிரிழந்த பிரியாவின் பெற்றோருக்கு நேரில் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார்.

ஸ்டாலின் ஆறுதல்

அப்போது, வீடு வழங்கும் ஆணை, அரசு வேலைக்கான பணி ஆணை மற்றும் நிவாரணத் தொகை உள்ளிட்டவை வழங்கினார். தொடர்ந்து, ட்விட்டர் பக்கத்தில், "கால்பந்தாட்ட வீராங்கனை ப்ரியாவின் மரணம் தாங்க முடியாத துயரம்.

ஏற்றமிகு உயரத்தை எட்டவிருந்த திறமைசாலியான அவரது இழப்பு, அவரது குடும்பத்துக்கும். நம் மாநில விளையாட்டுத்துறைக்கும் ஏற்பட்ட மாபெரும் இழப்பு. அவரை இழந்து வாடும் குடும்பத்தினர்-க்கு அரசு அனைத்து வழிகளிலும் உதவியாய் நிற்கும். இவை அனைத்தும் ப்ரியாவின் உயிர்க்கு ஈடாகாது" எனக் குறிப்பிட்டுள்ளார்.