மாணவி பிரியா உயிரிழப்பு - கல்லுாரியில் மௌன அஞ்சலி செலுத்திய மாணவர்கள்
மருத்துவமனையில் தவறான ஆப்ரேசன் காரணமாக உயிரிழந்த வீராங்கனை பிரியா பயின்ற ராணி மேரி கல்லுாரியில் சக மாணவர்கள் மௌன அஞ்சலி செலுத்தினர்.
வீராங்கனை உயிரிழப்பு
சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் பிரியா இவருக்கு வயது 17. இவர் சென்னை ராணிமேரி கல்லுாரியில் முதலாம் ஆண்டு பயின்று வருகிறார்.
இவர் கால்பந்தாட்டத்தில் மிகவும் ஆர்வம் கொண்டவராக இருந்து வந்துள்ளார். மாணவி பிரியா தேசிய அளவிலான கால்பந்தாட்ட போட்டியில் கலந்து கொண்டு சாதனைகளை படைத்து வந்தார்.
இந்த நிலையில், கடந்த மாதம் 20ம் தேதி வலது காலில் வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பெரியார் நகர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்கு மருத்துவர்கள் தவறான ஆப்ரேசன் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கு கால் வீங்கி இருக்கிறது. இதையடுத்து அவரது உயிருக்கு ஆபத்து என்று மருத்துவர்கள் கூறியதை அடுத்து, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பிரியாவுக்கு வலதுகால் துண்டித்து அகற்றப்பட்டது.
மாணவர்கள் மௌன அஞ்சலி
இந்த நிலையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரியா நேற்று உயிரிழந்தார். தவறான சிகிச்சையால் கல்லுாரி மாணவி பிரியா உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மாணவி படித்த ராணி மேரி கல்லுாரியில் மாணவர்கள், ஆசிரியர்கள் இன்று காலை மௌன அஞ்சலி செலுத்தினர்.