அனைத்து அணி நிர்வாகிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை - முக்கிய முடிவுகள்!

M K Stalin Tamil nadu DMK
By Sumathi Dec 28, 2022 05:43 AM GMT
Report

திமுக அனைத்து அணி நிர்வாகிகளுடனும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

முதலமைச்சர்  ஆலோசனை

திமுகவில் இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, தகவல் தொழில்நுட்ப அணி என மொத்தம் 23 அணிகள் உள்ளன. அனைத்து அணிகளுக்கும் சமீபத்தில் புதிதாக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

அனைத்து அணி நிர்வாகிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை - முக்கிய முடிவுகள்! | Chief Minister Consults With All Team Leaders

நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் விதமாக திமுகவின் மாவட்ட செயலாளார்கள் கூட்டமும், திமுகவின் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டமும் நடந்து முடிந்துள்ள நிலையில், தேர்தலில் அனைத்து அணிகளின் நிர்வாகிகளும், உறுப்பினர்களும் எவ்வாறு தயாராவது என்பது குறித்து

மு.க.ஸ்டாலின் ஆலோசனை வழங்க உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.